எபிரெயர், ஆறாம் அதிகாரம் பாகம் #3 57-09-15M 505 காலை வணக்கம், நண்பர்களே. இங்கே இருப்பது " ஒரு சிலாக்கியமாயுள்ளது. நம்முடைய போதகர் கூறின இந்த மகத்தான முன்னுரையை நிறைவேற்ற நிச்சயமாகவே ஒரு உண்மையான ஜீவியம் தேவையாயுள்ளது, அதற்கு தேவையில்லையா? ஆகையால் இத்தனை வருடங்களினூடாக அவர் நமக்கு அளித்திருக்கிற அவருடைய மகத்தான சுகமளிக்கும் வல்லமைகள் மற்றும் அவருடைய இரக்கங்களைக் குறித்த எல்லாவற்றிற்காகவும் நாம் கர்த்தருக்குத் துதி செலுத்திக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது நான் அறிவிக்கும்படியான ஒரு சில அறிவுப்புகளை வைத்துள்ளேன். ஒன்று, நாங்கள், சகோதரன் உட்ஸ் மற்றும் ராபர்ஸன், எங்களுடைய ஒரு பாதுகாப்பான பயணத்திற்காக எங்களுக்காக ஜெபித்த உங்கள் யாவருக்கும் நாங்கள் நன்றி கூற விரும்புகிறோம். அது ஒரு அற்புதமான நேரமாயிருந்தது; நான்கரை நாட்கள் பயணமாக சென்று பத்திரமாக மீண்டும் திரும்பினோம் என்று நான் நினைக்கிறேன். கர்த்தர் எங்களை ஆசீர்வதித்தார். 506 இப்பொழுது, இந்தப் பட்டிணத்தில் இங்கே...பிரிங்ஹாம் என்ற சாலையின் கடைசியில் சகோதரன் கிரஹாம் ஸ்நெலிங் அவர்களுடைய எழுப்புதல் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று நாங்கள் அறிவித்துக்கொண்டிருக்கிறோம். இந்த வருகின்ற புதன்கிழமை இரவு... நான் இன்னும் ஒரு சில நிமிடங்களில் ஒருவருடைய சவ அடக்க ஆராதனையைக் குறித்து அறிவிப்பேன், நான் அதற்கு நாளை அங்கு செல்ல வேண்டும். நாங்கள் புதன்கிழமை இரவு நீங்கள் அதை அறிந்து கொள்ளச் செய்வோம். சகோதரன் கிரஹாம் அங்கே தன்னுடைய ஆராதனையை முடிப்பதற்கு முன்னர் அவரை சந்திக்க எல்லோருமாக சேர்ந்து ஒரு குழுவாக செல்ல நாங்கள் விரும்புகிறோம். நாம் முழு சபையாக ஒன்று சேர்ந்து, நம்மால் முடிந்தால் சகோதரன் கிரஹாம் அவருடைய ஆராதனைகளில் ஒன்றில் நாம் இருக்கும்படியாக ஒரு குழுவாக அவரைச் சந்திக்க செல்ல முயற்சிப்போம். 507 இப்பொழுது இந்தப் பிற்பகல் சார்லஸ்டவுன் என்ற இடத்தில் இறந்தோரின் சடலம் வைக்கப்படும் இடத்தில் அநேக ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே சபைக்கு வந்து கொண்டிருந்த எழுபத்து நான்கு வயதுடைய திருமதி. கோல்வின் அவர்கள் நேற்றிய தினம் இந்த ஜீவியத்தைக் கடந்து, கர்த்தராகிய இயேசுவோடிருக்கும்படி சென்று விட்டபடியால், அவர்களுடைய சரீரம் அங்கு வைக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை அந்த அம்மையாருடைய அடக்கத்தின் போது சங்கை. திரு. மக்கினி அவர்கள் பிரசங்கிக்க உள்ளார். அவர் இதற்கு முன் அநேக வருடங்களாக போர்ட் புள்டன் என்ற இடத்தில் உள்ள மெத்தோடிஸ்டு சபையில் போதகராயிருந்து வந்தார், மற்றும் அவர்களுடைய தனிப்பட்ட ஒரு சிநேகிதராகவும் இருந்தார். ஆகையால் நான் அவருக்கு அந்த நேரத்தில் உதவி செய்யப் போகிறேன், அது இந்தியானாவில் உள்ள சார்லஸ்டவுன் என்ற இடத்தில் உள்ள சிறு சவ அடக்க ஆராதனை கூடத்தில், திங்கட்கிழமை ஒன்று முப்பது மணிக்கு நடைபெறும் என்று நான் நினைக்கிறேன். எனவே கோல்வின் குடும்பத்தின் நண்பர்கள் உங்கள் யாவரையும் நீங்கள் அளிக்கும் ஆறுதலான தைரியத்திற்கு இல்லை. சிறு கைக் குலுக்குதலுக்கு இப்பொழுது உங்களை மெச்சுவார்கள் என்பதை நான் அறிவேன். ஏனென்றால் அது என்னவென்பதையும், நாமும் அந்த மரணப் பள்ளத்தாக்கினூடாக சென்று கொண்டிருக்கிறோம் என்பதையும் அறிவோம், மேலும் ஒரு நண்பனை இழப்பது என்ன பொருட்படுத்துகிறது என்பதையும் அறிந்துள்ளோம். ஆகையால் நாம்... அந்த அம்மையார் இப்பொழுது இந்தியானாவில் உள்ள சார்லஸ்டவுன் என்ற இடத்தில் உள்ள சவ அடக்க சடல சிறு ஆராதனை கூடத்தில் வைக்கப்பட்டிருக்கிறார். எனவே நீங்கள் இந்தப் பிற்பகல் அங்கு காண செல்வீர்களேயானால், ஏன்? அது கோல்வின் குடும்பதினரால் மெச்சிக்கொள்ளப்படும் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். அவர்களுடைய ஜனங்களில் அநேகர் இன்னமும் இங்கே கூடாரத்திற்கு வருகிறார்கள். நான் அவர்களுடைய குடும்பத்தினருக்கு கிட்டத்தட்ட திருமணம் செய்து வைத்துள்ளேன், அடக்கம் செய்துள்ளேன், ஞானஸ்நானம் கொடுத்துள்ளேன், ஆகையால் திரு. கிரேசன், முன்பு இங்கே நம்முடைய அண்டை வீட்டாரயிருந்த அவர் அங்கே சவ அடக்கம் செய்பவராயிருக்கிறார். 508 ஆகையால் கர்த்தருக்குச் சித்தமானால், நாம் இக்காலையில் நாம் இப்பொழுது ஆய்ந்து படித்துக் கொண்டிருக்கிற இந்த மகத்தான பாடத்தில் எங்கே விட்டுச் செல்கிறோமோ, அங்கிருந்து இன்றிரவு எடுத்துப் பேச முயற்சிப்போம். ஆகையால் எனக்குத் தெரிந்தமட்டில் அறிவிப்புகள் அவ்வளவுதான் என்று நான் எண்ணுகிறேன். இப்பொழுது, வருகின்ற புதன்கிழமை இரவு, நாம் சகோதரன் கிரஹாம் அவர்களோடு இருக்கப்போவதை இன்றிரவு நாங்கள் அறிவிப்போம். 509 நம்முடைய வாசல்களில் உள்ள அந்நியர்கள் யாவரையும் நாங்கள் வரவேற்கிறோம். நீங்கள் இந்தக் காலையில் இங்கே இருப்பதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இந்த கூடுகைக்காக தேவன் உங்களை இன்றைக்கு மிகவும் அதிகமாயும், அதற்கும் அபரிமிதமாகவும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். 510 வெளியில் உள்ளவர்களுக்கு கேட்கும்படி அமைக்கப்பட்டுள்ள ஒலிப் பெருக்கி பெட்டிகள் இந்த நேரத்தில் சரியாக இயங்கவில்லையென்று சகோதரன் காக்ஸ் அவர்கள் சற்று முன் என்னிடத்தில் கூறியிருந்தார். அது ஒரு வேளை அங்கே ஒலிப்பெருக்கி பெட்டிகள் உள்ள இடத்தில் வானிலையின்படி அதிகப் பனிப் படர்ந்துள்ள காரணத்தினால் அவ்வாறு இருக்கலாம். அவைகள் துவக்கத்திலேயே நன்றாக செயல்படவில்லை, எனவே அது இந்தக் காரணமாக இருக்கலாம். 511 எனக்குத் தெரிந்த ஒரு சகோதரி, சகோதரி ஆர்கன்பிரைட் அவர்கள் இங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன். நான். இதைக் கேட்பது அருமையானதும் அல்ல, ஒழுங்கு முறையுமுமல்ல, ஆனால் சகோதரன் ஆர்கன்பிரைட் அவர்கள் வெளிநாட்டில் உள்ள காரணத்தால் நீங்கள் ஏதாவது தகவலைக் கேள்விப்பட்டீர்களா? நாங்கள் முடிந்தளவு சீக்கிரத்தில், அதாவது நான் அவரிடத்திலிருந்து ஏதாவது தகவலைக் கேள்விப்பட மிகுந்த ஆர்வங்கொண்டுள்ளேன். அவர் அங்கே அயல் நாடுகளுக்கு சென்று சகோதரன் டாமி ஹிக்ஸ் மற்றும் பால் காயீன் அவர்களோடு சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனியில் நடைபெறும் கூட்டங்களில் இருக்கிறார். எனவே சகோதரி ரூத் அவர்களே, நீங்கள் எதையாவது கேள்விப்பட்டால், உங்களால் முடிந்தளவு துரிதமாக நான் அதை உடனே அறிந்து கொள்ளும்படி நீங்கள் எனக்குத் தெரியப்படுத்துங்கள். 512 இப்பொழுது, இந்த சிறு கூடாரத்தில் உறுப்பினரை சேர்த்தல் என்பது கிடையாது. ஆனால் எங்களிடம் ஐக்கியம் கொள்ளுதல் என்பது மாத்திரமே உண்டு. எங்களிடத்தில் கிறிஸ்துவைத் தவிர வேறு கோட்பாடு கிடையாது, அன்பைத் தவிர வேறு பிரமாணம் இல்லை, வேதாகமத்தைத்தவிர வேறு புத்தகமும் கிடையாது. அந்த ஒரு புத்தகத்தை மாத்திரமே நாங்கள் அறிந்துள்ளோம், அந்த ஒரு காரியத்தை மாத்திரமே நாங்கள் அறிந்துள்ளோம், அதை மாத்திரமே நாங்கள் உடையவர்களாயிருக்கிறோம். இயேசுவின் இரத்தம் நம்மை எல்லாப் பாவங்களிலிருந்தும் சுத்திகரிக்கின்றபடியால், நாம் ஒருவரோடு ஒருவர், எல்லோரோடும் ஐக்கியங்கொள்கிறோம். 513 இந்தக் காலையில் அந்த சகோதரன் ஜெபித்ததை நான் கவனித்துக் கொண்டிருந்தேன், ஜனங்களில் சிலராகிய நீங்கள் கேட்டிருக்கலாம், அவர் ஒரு கத்தோலிக்கராயிருந்தார், ஆகையால், இல்லை அவர் முன்னர் ஒரு கத்தோலிக்கராயிருந்தார். நாம் இங்கு வருகிற எல்லா வித்தியாசமான ஜனங்களையும் உடையவர்களாயிருக்கிறோம். ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் இங்கு அமர்ந்து கொண்டிருக்கிற ஒரு மெனோனைட் ஸ்தாபனப் பிரிவினைச் சார்ந்த சகோதரன் ஒருவரின் கரத்தைக் குலுக்க வேண்டிய ஒரு சிலாக்கியம் கிடைத்தது. மெனோனைட் பிரிவினரிலிருந்து, மெத்தோடிஸ்டுகளிலிருந்து, பாப்டிஸ்டுகளிலிருந்து, கத்தோலிக்கத்திலிருந்து, அல்லது விருப்பமுள்ள யாராயிருந்தாலும் அவர்கள் வரட்டும். நாம் ஒன்று சேர்ந்து தேவனுடைய வார்த்தையின் ஆசீர்வாதத்தின் பேரில் ஐக்கியங்கொள்கிறோம். இங்கே யேகோவா சாட்சிக்காரர்களும், வித்தியாசமான ஜனங்களும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள், மேலும் பல்வேறுபட்ட ஸ்தாபனத்தவர்களையும் நான் கண்டேன். 514 நான் முன்பெல்லாம் மேற்குப் பகுதியை விரும்புவது வழக்கம். (நான் இன்னமும் விரும்புகிறேன்) நான் குதிரைகளையும், கால் நடைகளையும் நேசிக்கிறேன். நான் ஒரு பண்ணையில் வளர்க்கப்பட்டபடியினால், நான் நான் அதை விரும்புகிறேன். நாங்கள் முன்பெல்லாம் கால்நடைகளை இனம் பிரித்து மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வோம், அப்பொழுது நானும் அவைகளோடு செல்வேன். கால்நடைகளை ஓட்டிச் சென்று மேய்க்க எங்களுக்கு வேலியிடப்பட்ட ஒரு இடம் இருந்தது. கிழக்கத்திய ஜனங்களாகிய நீங்கள் கால்நடைகள் வழிதவறிப் போய்விடாதபடி அமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு வேலி என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா அல்லது இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அது நீங்கள் அந்த காட்டிற்குள் கால்நடைகளை மேய்சலுக்கு ஓட்டிச் செல்லும்போது, அவைகள் வழிதவறிச் செல்வதைத் தடுக்க அவர்கள் ஒரு வேலியிட்டு வைத்திருப்பர், எனவே அவைகள் அந்த கால்நடை பண்ணைகளுக்குள்ளே திரும்பி வந்து மேய்ந்து கொண்டிருக்கும். அங்கே அவர்கள் குளிர்காலத்தில் போஷிப்பதற்காகவே வளர்க்கின்ற புற்களையே அவைகள் மேயும். ஆகையால் அவர்கள் மலைகளின் மேலும் கூட அவ்வாறு வேலையிட்டு வைத்திருக்கின்றனர், அங்கே அவர்கள் ஆண், பெண் என்று பிரித்துவிடுகிறார்கள். அதுவே அவ்வாறு வேலியிட்ட இடமாக அழைக்கப்படுகிறது. ஆனால் அந்த வேலியிட்ட முக்கிய பகுதியின் நுழைவாயிலில் பண்ணை மேற்பார்வையாளர் நின்று, அதனூடாக கால் நடைகள் சென்றுகொண்டிருக்கும்போது நின்று கவனிக்கிறார். 515 இப்பொழுது நான் அங்கே அநேக நாட்கள் அமர்ந்து, என்னுடைய குதிரை சேணத்தில் அமர்ந்தவாறு, கால்நடைகள் உள்ளே செல்லும்போது அவர்கள் கவனிப்பதை நானும் கவனித்துள்ளேன். அங்கே பல்வேறுபட்ட எல்லாவிதமான அடையாளக் குறிகளோடும் உள்ள கால்நடைகள் உள்ளே சென்றன. அவைகளில் சிலவற்றிற்கு "டைமன்ட்' என்று அடையாளக் குறியிடப்பட்டிருந்தது. அவைகளில் சிலவற்றிற்கு "பார் X" என்று அடையாளக் குறியிடப்பட்டிருந்தது. அதற்கு அடுத்ததற்கோ குதிரைச் சின்னமிட்டு அதற்கு மேலே "டர்கி டிராக்' அடையாளமிடப்பட்டிருந்தது. அவர்கள் அவைகளை வெளியே ஓட்டிச் செல்லும்போது, அவைகள் தங்களுடையது என்று அறிந்து கொள்ளும்படிக்கு அவர்கள் எல்லோருமே பல்வேறுபட்ட அடையாளங்களையேப் போட்டிருந்தனர். 516 இப்பொழுது, அந்த பண்ணை மேற்பார்வையாளர், அவைகள் என்னவிதமான அடையாளக் குறியிடப்பட்டிருந்தன என்பதில் ஆர்வங்கொண்டிருக்கவில்லை, ஆனால் அவைகளினுடைய காதில் அவைகளினுடைய இனத்தைக் காட்டும் இரத்ததின் அடையாளச் சீட்டைக் கவனிப்பதிலேயே ஆர்வங்கொண்டிருந்தனர். அங்கு உள்ளே சென்ற ஒவ்வொன்றும் என்ன அடையாளக் குறியிடப்பட்டிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, ஆனால் அவைகள் ஹியர்போர்டு என்ற நல்ல வம்சாவளி இனத்தைச் சார்ந்ததாய் இருக்கவேண்டியதாயிருந்தது. அது ஒரு ஹியர்போர்டு இனத்தைச் சாந்ததாயிருந்தாலொழிய மற்றபடி அதனால் அங்கே உள்ளே செல்ல முடியாது. எனவே அது அந்த இனத்தைச் சார்ந்தது என்று பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டியதாயிருந்தது இல்லையென்றால் அதனால் உள்ளே செல்ல முடியாது. 517 கர்த்தர் வரும் நாளிலே, நாம் என்னப் பெயரை சூடிக்கொண்டிருக்கிறோம் என்பதற்கு அவர் கவனம் செலுத்தப் போவதில்லை, ஆனால் நாம் மீண்டும் பிறந்த கிறிஸ்தவர்களாயிருக்கிறோமா என்பதற்கே கவனம் செலுத்தப் போகிறார் என்று நான் நினைக்கிறேன். அது உண்மை . அதுவே கிறிஸ்துவின் வம்சப்பட்டியலாகும். நாம் எல்லோரும் கிறிஸ்தவர்களாயிருக்கிறோம் என்பதை இரத்தப் பரிசோதனைதான் நம்மை நிரூபிக்கப்போகிறது. நாம் எல்லோரும் அந்த விதமாக அங்கே இருக்கப் போகிறோமென்றால், நாம் அந்த விதமாகவே இங்கேயும் இருக்கலாம். நீங்கள் அவ்வாறு கருதவில்லையா? அந்தவிதமாகவே நாம் எல்லா பல்வேறுபட்ட சபைகளிலிருந்து வருபவர்களோடும் ஐக்கியங்கொள்வதை பாராட்டுகிறோம். 518 இப்பொழுது நாம் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட எபிரெய புத்தகத்தில் ஆய்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு சகோதரன் இந்த ஒலி நாடாக்களை எடுத்துக்கொண்டு போய், அவர் இதன் பேரில் விரிவுரைகள் கொண்ட ஒரு புத்தகமாக உருவாக்கிக் கொண்டிருக்கிற அளவிற்கு இதனை அவ்வளவாக கேட்டுக் களிகூர்ந்துள்ளார். 519 இப்பொழுது நாம் வெகு சீக்கிரத்தில் 11-ம் அதிகாரத்திற்கு வரப்போகிறோம். நாம் 11-ம் அதிகாரத்தின் பேரில் மழைக்காலத்தை செலவிட எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் நாம் அந்த ஒவ்வொரு சிறப்பியல்பு கொண்டவர்களையும், நாம் வேத புத்தகத்தினூடாக திரும்பிச் சென்று, முழு வேதத்துடன் இணைத்துப் பார்க்க விரும்புகிறோம். நான் அதைச் செய்யப்போவதாக இருந்தேன். நான் இதில் சிலவற்றின் பேரில், இந்த முந்தின அதிகாரங்களில் உள்ள பகுதியில் உள்ளவற்றை முழு வேதப் புத்தகத்துடனும் இணைத்துப் பார்க்கவுள்ளேன். ஏனென்றால் நீங்கள் பாருங்கள், வேதவாக்கியம் வேதவாக்கியத்தை நிரூபிக்க வேண்டும். 520 ஆகையால், எந்த முரண்பாடாவது இருக்குமாயின், வேதவாக்கியங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன என்று எவரேனும் நினைத்தால், அது தவறாகும். எந்த ஒரு வேத வாக்கியமும் மற்ற வேதவாக்கியத்தோடு முரண்படுகிறதேயில்லை. முரண்பாடு என்பதே அதை நோக்கிப் பார்க்கிற நம்முடைய விதமே முரண்படுகிறதாயிருக்கலாம். ஆனால் வேதவாக்கியம் தானே முரண்படுகிறதில்லை. இப்பொழுது நான் இந்த ஊழியத்தில் இருபத்தியாரு வருடங்களாக இருந்து வருகிறேன். நான் ஒரு முறை கூட வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள எந்தக் காரியமும் வேதத்தில் எந்த ஒரு காரியத்தோடும் முரண்படுகிறதாக ஒரு போதும் கண்டதேக் கிடையாது. அது அவ்வாறு அங்கில்லை என்பதை நான் நான் அறிவேன். 521 இன்றைக்கு நாம் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட அதிகாரங்களில் ஒன்றான எபிரெயர் 7-வது அதிகாரத்தில் ஆய்ந்து படித்துக்கொண்டிருக்கிறோம். எவரிடத்திலேனும் வேதாகமம் இல்லாமலிருந்து, அதே சமயத்தில் நாங்கள் வாசிக்கையில் அதைப் பின் தொடர்ந்து கவனிக்கவேண்டும் என்று விரும்பி, நீங்கள் உங்களுடைய கரத்தினை உயர்த்த விரும்பினால், நாங்கள் உங்களுக்கு ஒரு வேதாகமத்தைக் கொண்டுவர மகிழ்ச்சியடைவோம். நான் மூப்பர்களில் சிலரை, யாராவது இங்கு வந்து அதைக் கொண்டு செல்லும்படிக் கூறுவேன். யாரோ ஒருவர் தன்னுடைய கரத்தை அங்கே பின்னால் உயர்த்திக்கொண்டிருக்கிறார். சகோதரனே, உங்களுக்கு நன்றி, உங்களுக்கு ஒரு வேதாகமம் வேண்டுமாயின், உங்களுடைய கரத்தை அப்படியே உயர்த்துங்கள், அப்பொழுது அவர்கள் அதை உங்களிடத்திற்கு கொண்டு வருவார்கள். 522 இப்பொழுது, ஒரு சபையானது கட்டப்படக் கூடிய ஒரே வழி, ஒரு மனிதன் விசுவாசங்கொண்டிருக்கக் கூடிய ஒரே வழி தன்னுடைய ஸ்தாபனத்தின் மூலமல்ல, தன்னுடைய இன்னல்களின் மூலமாயல்ல. ஆனால் அவனுடைய விசுவாசம் ஏதோ ஒரு மனிதனுடைய கருத்துகளைக் கொண்ட வேத சாஸ்திரத்தின் பேரில் சார்ந்திருப்பதல்ல, ஏனென்றால் அது ஏறக்குறைய மனிதனுடையதாயிருக்கிறது. ஆனால் விசுவாசம் தன்னுடைய பயபக்தியை தோற்றுவிக்கும்படியான இளைப்பாறும் ஸ்தலத்தைக் கண்டறியக் கூடிய ஒரே வழி நிலையான, மாறாத தேவனுடைய வார்த்தையின் பேரிலேயாகும். "விசுவாசம் கேள்வியினால், வார்த்தையைக் கேட்பதனால் வரும். அந்த விதமாகத்தான் அது வருகிறது. விசுவாசம் கேட்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்படுகின்றபோது, அது என்றென்றைக்குமாய் தீர்த்து வைக்கப்படுகிறது. அதனை எந்தக் காரியமும் எப்போதும் இனி ஒரு போதும் அசைக்கவே முடியாது, என்ன வந்தாலும் அல்லது போனாலும் கவலைப்பட வேண்டியதேயில்லை. அந்த விசுவாசத்தை எந்தக் காரியமும் ஒருபோதும் மாற்றவே முடியாது. அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் நங்கூரமிடப்பட்டிருக்கிறீர்கள், நீங்கள் இனிமேல் காலத்திலும், நித்தியத்திலும் மாறப்போவதேயில்லை. நீங்கள் என்றென்றைக்குமாய் நங்கூரமிடப்பட்டிருக்கிறீர்கள், "ஏனென்றால் தேவன் பரிசுத்தமாக்கப் படுகிறவர்களை ஒரே பலியினாலே அல்லது அழைக்கப்பட்டவர்களை என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்." 523 விசுவாசம் கிறிஸ்தவனுடைய, விசுவாசியினுடைய ஜீவியத்தில் அப்பேர்ப்பட்ட ஒரு மகத்தான ஸ்தானத்தைக் கொண்டுள்ளது, அது ஒரு சேற்றுக் கல்லறையின் அருகில் அல்லது ஒரு சவப்பெட்டியின் அருகில், அங்கே ஒரு விலையேறப் பெற்ற குழந்தையோ அல்லது ஒரு காதலியோ இந்த ஜீவியத்தைவிட்டுக் கடந்து அப்பால் செல்லும்போது, அது அதனுடைய உறுதியை எடுக்க முடியும். அப்பொழுது கழுகுக் கண்ணின் ஒரு கூர்மையான பார்வையோடு, "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்று கூறின அவரை நோக்கிப் பார்க்க முடியும். அப்பொழுது அவர்கள் பின்னானக் காரியங்களை மறந்து விடுகிறார்கள். அவர்கள் பரம் அழைப்பின் இலக்கை நோக்கித் தொடருகிறார்கள். 524 தேவன் அப்படிப்பட்டதை அருளியிருப்பதற்காகவும், அதை எல்லாருக்கும் ஒரு கிருபை வரமாக உண்டுபண்ணியிருக்கிறார் என்பதற்கும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அப்படித்தான் சபைகள் இருக்க வேண்டியதாயிருக்கின்றன. சபைகள் என்பது ஸ்தாபனங்களையோ அல்லது ஸ்தாபன அமைப்புகளையோ பொருட்படுத்துகிறதில்லை; அது "ஜனக்குழுக்களை, வார்த்தையின் ஐக்கியத்தின் கீழ் ஒன்று சேர்ந்துள்ள விசுவாசிகளையே" பொருட்படுத்துகிறது. 525 இங்கே இந்த பரிசுத்த பவுலின் ஆச்சரியமான உபதேசத்தில், இந்த பிண்ணணியில், முந்தின அதிகாரங்களில், அவன் குறிப்பாக கர்த்தராகிய இயேசு யாராயிருந்தார் என்றும், அவரின் ஒப்புயர்வற்ற தெய்வீகத் தன்மையோடும் தொடர்புப்படுத்திக் கூறி வந்துள்ளான். கிறிஸ்து தேவனாயிருந்தார், மனுஷர் அவரை உணரும்படியாகவும், அவரைத் தொடும்படியாகவும், அவரோடு ஐக்கியங்கொள்ளும் படியாகவும் ஆனார். கிறிஸ்து, கர்த்தராகிய இயேசு, தேவன் அந்த சரீரத்திற்குள் வாசம் செய்தார், "தேவன் மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார்" என்பதாயிருந்தது. 1 தீமோத்தேயு 3:16-ல், "அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்" என்று கூறப்பட்டுள்ளது. 526 மகத்தான யேகோவா இறங்கி வந்து, தம்முடைய சொந்த குமாரனின் சரீரத்தில் ஜீவிப்பதன் மூலம் தெளிவாகத் தெரியக் கூடியவராகி, பலர் அறியக் கூறி, உலகத்தை தம்மோடு ஒப்புரவாக்கிக்கொண்டார். தேவன் வேறுயாருமாயிருக்கவில்லை... கிறிஸ்து தேவனேயன்றி வேறொருவருமாயிருக்கவில்லை. தேவன் கிறிஸ்துவேயன்றி வேறொருவருமாயிருக்கவில்லை. இரண்டும் ஒன்று சேர்ந்து சரீரப்பிரகாரமான தேவத்துவமாகி, தேவன் பாடுபடும்படியாக தேவதூதரிலும் சற்று சிறிவராக்கப்பட்டார். தேவதூதர்களால் பாடுபடமுடியாது. இயேசு தேவன் வாசம் செய்த கூடாரமாயிருந்தார். 527 வேதம் அப்போஸ்தலருடைய நடபடிகள் 7-ம் அதிகாரத்தில், "கூடாரங்களையும், சர்வாங்கா தகனபலியையும், சர்வாங்க தகனபலிகளையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை நீர் எனக்கு ஆயத்தம்பண்ணினீர். ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட கூடாரங்களில் வாசமாயிரார், ஆனால் ஒரு சரீரத்தை நீர் எனக்கு ஆயத்தம்பண்ணினீர்" என்று கூறப்பட்டுள்ளது. அது மனிதனோடு ஐக்கியங்கொள்ள வாசம் செய்யும் கூடாரம் என்பதாகும். 528 தேவன் அனுமதிப்பாரேயானால், நாம் இங்கே இந்த அதிகாரத்தினூடாகச் சென்று பார்த்தவுடனே அல்லது இந்த முழு புத்தகத்தையும் பார்த்து முடித்தவுடனே, நாம் ரூத்தின் புத்தகத்திற்குத் திரும்பிப் போய், அதனை எடுத்து, எப்படி தேவன் இழந்து போனதை, தம்மோடு ஒப்புரவாக்கிக்கொள்ளும்படி, நமக்கு இனத்தாராகும்படிக்கு ஐக்கியங் கொள்வதன் மூலம் நம்மில் ஒருவரானார் என்பதை அங்கே காண்பிக்க விரும்புகிறோம். மீட்பர் இனத்தாராயிருக்க வேண்டும், அந்த ஒரே வழியிலேயே தேவன் நமக்கு இனத்தாராகும்படிக்கு நம்மில் ஒருவராக முடிந்தது. ஆகையால் அவர் தூதனாக முடியாது, மனிதனுக்கு இனத்தாராயிருக்க வேண்டியதாயிருந்தது. 529 நான் நேற்று மாலை இருதயம் நொறுங்குண்ட மகனிடத்தில், என்னுடைய கூட்டாளியினிடத்தில் பேசிக்கொண்டிருந்த போது, அவன் சற்று முன் மரித்துப் போய் விட்டிருந்த தாயைக் குறித்து பேசும்போது, "ஓ சகோதரன் பில், அவள் இன்றிரவு ஒரு தூதனாயிருக்கிறாள் என்று நான் யூகிக்கிறேன்" என்றான். 530 அதற்கு நான், "இல்லை, ஈயர்ள், அவள் ஒருபோதும் ஒரு தூதனாயிருக்கமாட்டாள். அவள் ஒரு ஸ்திரீயாகவே இன்றிரவும் இருக்கிறாள், தேவன் அவளை ஸ்திரீயாக உண்டாக்கினபடியால், அவள் எப்பொழுதுமே ஸ்திரீயாகவே இருப்பாள், ஒரு போதும் ஒரு தூதனாயிருக்கவேமாட்டாள்" என்று கூறினேன். தேவன் தூதர்களை உண்டுபண்ணினார். அவர் மனிதர்கள் ஒருபோதும் தூதர்களாகும்படிக்கு உண்டுபண்ணவேயில்லை. அவர் தூதர்களையும் மனுஷர்களையும் உண்டுபண்ணினார். ஆகையால் மனுஷர் ஒருபோதும் தூதர்களாக மாட்டார்கள், தூதர்களும் ஒருபோதும் மனுஷர்களாகவேமாட்டார்கள். தேவன் அவர்களை வித்தியாசமாகவே உண்டுபண்ணினார். 531 இப்பொழுது, பாவம் வந்தக் காரணத்தால் அந்த அழியாமையிலிருந்து பெரிய அகன்ற எட்டாத தூரத்தில் விழுந்து போயிருந்த மனிதனை மீட்க கிறிஸ்து மாம்சமானார், எனவே தேவன் இறங்கி வந்து, ஒரு மனித உருவின் ரூபத்தைத் தெரிந்து கொண்டு, நம்முடைய பாவங்களை சுமந்து, நம்முடைய மரணத்தை தம்மேல் ஏற்றுக்கொள்ள நம்முடைய இனத்தாரானார். 532 நாம் முந்தின பாடங்களில் அளித்துக்கொண்டிருந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றை ஒரு சிறு பிண்ணணிக்காக புதியதாக வந்திருப்பவர்கள் புரிந்து கொள்ளும்படியாக கூறுவோம். தேவன் கல்வாரிக்குச் செல்லும் தன்னுடைய பாதையில் இருந்தார். மரணத்தின் கொடுக்கு அவர் மேலிருந்தபோது, அவரைச் சுற்றி ரீங்காரமிட்டுக்கொண்டிருந்து, முடிவிலே அவர் மரித்துப் போகும்படியாய் அது அவரைக் கொட்டினது. சூரியனே இருளாய் அஸ்தமித்து போகுமளவிற்கு அவர் மரித்துப்போனார். சந்திரனும் நட்சத்திரங்களும் தங்களுடைய ஒளியைக் கொடாத அளவிற்கு அவர் மரித்துப் போய்விட்டார். 533 அதாவது மரணத்தின் கொடுக்கை நங்கூரமிடச் செய்ய, எப்படியாய் அவர் அதை செய்ய வேண்டியதாயிருந்தது. அவர் ஒரு அழிவில்லாத நபராய் இருந்திருந்தால், அவர் ஆவிக்குரிய சரீரத்தில் இருந்திருந்தால், அல்லது ஆவியாய் இருந்திருந்தால், மரணம் அதனுடைய கட்டுப்படுத்தும் ஆற்றலை கொண்டிருந்திருக்காது. எனவே அவர் மரணத்தின் கொடுக்கை எடுத்துப்போட மாம்சமாக வேண்டியதாயிருந்தது. ஒரு தேனீயோ அல்லது கொட்டுகிற ஒரு பூச்சியோ ஒரு முறை ஆழமாக கொடுக்குப் பதியும்படி கொட்டிவிட்டால், அதனால் மீண்டும் ஒருபோதும் கொட்டவே முடியாது. அது தன்னுடைய கொடுக்கை அந்த மாம்சத்திலேயே விட்டுவிடுகிறது. அந்த விதமாகத்தான் கிறிஸ்து... இல்லை தேவன் ஆனார். கிறிஸ்து தம்முடைய சொந்த மாம்சத்தில், அந்த மரணத்தின் கொடுக்கை நங்கூரமிடச் செய்யும்படியாக அவர் மாம்சத்தில் வாசம் செய்தார். மரணமானது சிலுவையிலே அவரிடத்திலிருந்து பிடுங்கப்பட்டபோது, அது அதனுடைய கொடுக்கை அந்த சரீரத்திலேயே விட்டுவிட்டது, எனவே அதனால் இனிமேல் எந்த ஒரு விசுவாசியையும் கொட்டவே முடியாது. அதனால் வாய்க்குள்ளேயே ரீங்காரமிடுகின்ற ஒரு சத்தத்தையே எழுப்ப முடியும், அது ஒரு ரீங்காரமிட்டு அச்சுறுத்துதலைச் செய்ய முடியும், ஆனால் அதனால் கொட்ட முடியாது, ஏனென்றால் அதற்கு கொடுக்கையில்லை. 534 மகத்தான பரிசுத்த பவுல் தன்னுடைய மரண பவனியிலே, "மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம், ஏனென்றால் மரணமும் பாதாளமும் அதனுடைய வல்லமையை இழந்துவிட்டதே" என்று கூச்சலிட்டுக் கூறினான். 535 இப்பொழுது, கடந்த ஞாயிறு நாம், "ஆகையால், கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு" என்று 6-ம் அதிகாரத்தில் உள்ளதை எடுத்து "பூரணராகும்படி கடந்து போவோமாக" என்ற இதை நாம் வாசித்தோம். ஜனங்கள் இன்றைக்கு அநேக சபைகளிலும், பிரான்ஹாம் கூடாரத்தோடும், மற்றும் வித்தியாசமான சபைகளிலும் இருப்பதை நாம் கண்டறிந்தோம். நாம் கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை ஆய்ந்து படிப்பதன் பேரில் மிக அதிகப்படியான நேரம் தரித்திருக்கிறோம்: அவர் ஆபிரகாமின் குமாரனாயிருந்தார், அவர் முன்னிருந்த வம்ச வரலாற்றில் இன்னார்- இன்னாருடைய குமாரனாயிருந்தார். ஆனால் வேதம், "நாம் அந்தக் காரியங்களை ஒரு புறம் தள்ளிவிட்டு, பூரணராகும்படி கடந்து போவோமாக" என்று உரைத்துள்ளது. 536 நீங்கள் முதலில் அந்த உபதேசத்தை அறிந்து கொள்ள வேண்டும், ஆகையால் நீங்கள் இந்த எல்லாக் காரியங்களையும் அறிந்து கொள்ள வேண்டும்; அதன் பின்னர் அவைகளை ஒருபுறம் தள்ளி வைப்போமாக, ஏனென்றால் அவன் மரித்தோரின் உயிர்த்தெழுதல், கைகளை வைக்குதல், ஸ்நானங்கள், அவையாவும் தேவனுடைய செத்த நிபந்தனைகள் என்று கூறினான். அதே சமயத்தில் அவர்களுக்கு அவைகளில் ஜீவன் இல்லை. ஆனால் இன்றைக்கு சபையோ, "ஓ, நாங்கள் இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையில் விசுவாசங்கொண்டுள்ளோம்" என்ற அந்தக் காரியங்களண்டைக்கேச் செல்கின்றன. ஆம், நிச்சயமாக, "நாங்கள் தண்ணீர் ஞானஸ்நானத்தில் விசுவாசங்கொண்டுள்ளோம்.'' ஆம். நிச்சயமாக "கைகளை வைக்குதல் ." 537 பவுல், "தேவனுக்குச் சித்தமானால், இப்படியே செய்வோம். ஆனால் அவையாவும் இருக்கின்ற போதிலும், நாம் அதை ஒருபுறமாக இப்பொழுது தள்ளிவிட்டு, பூரணராகும்படி கடந்து போவோமாக" என்றான். 538 இப்பொழுது, சபையானது ஸ்தாபனங்களினூடாக பரிபூரணமாக்கப்பட முடியாது. ஏனென்றால் அது எல்லா நேரத்திலும் தேவனிடத்திலிருந்து அதிக தூரமாய் விலகிச் செல்கிறது. அதாவது அவை ஒன்று கொன்றிலிருந்தும் அதிக தூரமாய் விலகிச் செல்கிறது. நாம் தடைவேலிகளை இழத்துப் போட்டுக்கொள்கிறோம், நாம் நம்மையே பிரித்துக் கொள்கிறோம், விசுவாசமேயில்லாதது போன்றிருக்கிறோம். ஆனால் நாம் அந்த மூல உபதேச வசனங்களை விட்டுவிடும் போது, நாம் பூரணராகும்படிக்கு கடந்து செல்வோமானால், அப்பொழுது அந்த சிறிய காரியங்கள் அதிக பயனற்றதாகிவிடுகின்றன. 539 நாம் ஒரு உறவு முறைக்குள்ளாகச் செல்கிறோம். நாம் பரிபூரணமாக்கப்படக் கூடிய ஒரே வழி கிறிஸ்துவுக்குள் இருப்பதேயாகும் என்பதை நாம் கண்டறிகிறோம். அப்பொழுது நாம் கண்டறிவது, வேதாகம உபதேசங்களின் மூலம், நாம் எப்படி கிறிஸ்துவுக்குள் பிரவேசிக்கிறோமென்றால், தண்ணீர் ஞானஸ்நானத்தினால் அல்ல, கைகளை வைக்குதலினால் அல்ல, உபதேசத்தினால் அல்ல, "ஆனால் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, அவருடைய பாடுகளினூடாக பரிபூரணமாக்கப்பட்டிருக்கிறோம். அப்பொழுது நாம் வித்தியாசமாக நோக்கிப் பார்க்கிறோம். நாம் வித்தியாசமாக சிந்திக்கிறோம். நாம் வித்தியாசமாக செயல்படுகிறோம். நாம் வித்தியாசமாக ஜீவிக்கிறோம். அது ஒரு கடமை என்ற காரணத்தினால் அல்ல, அல்லது நாம் சபைக்கு சொந்தமானவர்களாயிருக்கிறோம் என்ற காரணத்தினால் அல்ல, ஆனால், "நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிற காரணத்தினாலேயாம்," அதுவே நம்மை தேவனுடைய இராஜ்ஜியத்தின் உடன் பிரஜைகளாக்குகிறது, அதன் பின்னர் அதில் எந்த ஸ்தாபனமும் இல்லை அல்லது எந்த தடை வேலிகளுமேயில்லை. நாம் எல்லாரும் ஒரே மகத்தான சரீரமாயிருக்கிறோம். 540 இப்பொழுது நாம் இன்னும் ஒரு சில நிமிடங்களில், இக்காலைப் பாடத்தின் பேரில் உள்ளே செல்ல ஆயத்தமாயிருக்கிறோம். நான் இங்கே இன்னும் ஒரு காரியத்தை எடுத்துக் கூற விரும்புகிறேன், அது பவுல் இந்த புத்தகத்தில் 7-வது... இல்லை 6-வது அதிகாரத்தில் பேசிக்கொண்டிருக்கிறான், அது நாம் கிறிஸ்துவுக்குள் பரிபூரணமாக்கப்படுகின்றோம் என்பதையே நாம் இங்கே கண்டறிகிறோம். அதன்பின்னர் 6-வது அதிகாரத்தின் 13-வது வசனத்தில் உள்ள ஒரு சிறு பிண்ணணியை சற்று பார்ப்போம். ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குத்தத்தம் பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டு, தேவன் தம்மிலும் பெரியவர் ஒருவர் பேரில் ஆணையிட முடியாத காரணத்தால் அவர் தமது பேரிலே தானே ஆணையிட்டார். 541 இப்பொழுது நாம் திரும்பிச் செல்ல விரும்புகிறோம். நாம் அப்படியே ஒரு சில நிமிடங்கள் கலாத்தியர் நிரூபத்திற்கு செல்வோம். கலாத்தியரின் புத்தகத்திற்கு திரும்பி, கலாத்தியர் 3:16-ஐ பார்ப்போம். நாம் இங்கே அப்படியே ஒரு நிமிடம் அவர் என்னத்திற்கு ஆணையிட்டார் என்பதை இங்கே வாசித்துப் பார்ப்போம். ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக் குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக் குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்த சந்ததி கிறிஸ்துவே. 542 இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களேயானால், நீங்கள் வாசிக்கையில் அதை இப்பொழுது கூர்ந்து வாசியுங்கள். ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் (ஒருமை) வாக்குத்தத்தங்கள் (பன்மை) பண்ணப்பட்டன; 543 "ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும். இப்பொழுது ஆபிரகாமின் சந்ததி ஒன்றாயிருந்தது, அது கிறிஸ்துவாயிருந்தது; முன்னிழலாய் ஈசாக்கு இருந்தான். ஆனால் ஆபிரகாம் அநேக பிள்ளைகளை உடையவனாயிருந்தான். அவன் ஈசாக்கைப் பெற்றிருந்ததற்கு முன்னர் ஒருவனை உடையவனாயிருந்தான், அது சாராள் தான் மிகவும் வயது சென்றவள் என்று எண்ணி, அன்னாள் குழந்தையை பிறப்பிக்க வேண்டும் என்று விரும்பின சாராளின் அவிசுவாசப் பெருங்குறையையே காண்பித்துக் கொண்டிருந்தது. வேறு பக்க வழிக்கு தேவனண்டைச் செல்வது, அதாவது தேவன் அதைச் செய்வதாக வாக்களித்திருந்த அந்த வழியிலிருந்து வேறு ஏதோ ஒரு வழியை உருவாக்குவதாயுள்ளது. 544 ஆனால் தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தைக் காத்துக் கொள்கிறார். அது எவ்வளவு தான் அறிவுக்குப் பொருந்தாததாய்த் தென்பட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை, தேவன் தம்முடைய வாக்குத்தத்ததை நிறைவேற்ற கடமைப்பட்டவராயிருக்கிறார். அன்னாள் ஒருகால் இல்லை சரியாகக் கூறினால் ஆகார், சாராளின் அடிமைப் பெண்ணாகிய இவள் ஆபிரகாமின் மூலமாக ஒருகால் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க, அதையே அவள் எடுத்துக்கொள்ளலாம் என்று சாராள் எண்ணினாள். அதுவே இஸ்மவேலானது, அது அப்பொழுதிலிருந்து இப்பொழுது வரை மாம்சத்தில் ஒரு முள்ளாகவே இருந்து வந்துள்ளது. அது இன்னமும் மாம்சத்தில் ஒரு முள்ளாகவே உள்ளது, ஏனென்றால் அங்கிருந்து தான் அரேபியர்கள் தோன்றினர், அவர்கள் அந்த விதமாகவே எப்பொழுதும் இருந்து வருகின்றனர். 545 இப்பொழுது மறைவற்ற தேவனுடைய வார்த்தையை நீங்கள் எந்த நேரத்திலாவது அவிசுவாசித்து, வேறு ஏதோ ஒன்றை நீங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டால், அது அப்பொழுதிலிருந்து உங்களுடைய மாம்சத்தில் ஒரு முள்ளாய் இருக்கும். தேவன் என்னக் கூறினாரோ அதை அப்படியே நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் அதைக் கூறியிருந்தால், அவர் அதை அப்படியே அதைத்தான் பொருட்படுத்துகிறார். ஓ, அவருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! அப்படியே அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளுங்கள். 546 என்னதான் பக்க வழியாய்ச் செல்ல முயற்சித்து, "பரவாயில்லை , அது உண்மையாகவே அதைப் பொருட்படுத்துகிறதில்லை" என்று கூறினாலும் கவலைப்பட வேண்டியதில்லை. தேவன் ஒரு வாக்குத்தத்தத்தை உண்டு பண்ணுகிறபோது, அது எதைக் கூறுகிறதோ, அதை அது அப்படியே பொருட்படுத்துகிறது. 547 இப்பொழுது நாம் கூர்ந்து கவனிப்போமேயானால், ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள்... வித்தோ ஒன்றாயிருந்தது, ஒருமை, மற்றது வாக்குத்தத்தங் களாயிருந்தன. ஒரு வாக்குத்தத்தத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கின்றன, ஆபிரகாமின் வித்தில் ஒரு நபரைக் காட்டிலும் அதிகமானவர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். புரிகிறதா? ஒரு வித்துதான் உள்ளது, ஆனால் இந்த வித்தின் அநேக ஜனங்கள். புரிகிறதா? அவைகள் வெறுமென ஆபிரகாமுக்கு மாத்திரமாயிருக்கவில்லை அல்லது ஈசாக்கிற்கு மாத்திரமாயி ருக்கவில்லை. ஆனால்... அது எல்லா ஆபிரகாமின் வித்திற்குமானதாயிருந்தது. அந்த சந்ததியின் ஒவ்வொரு தனிப்பட்ட வித்திற்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன. உங்களுக்கு இது புரிகிறதா? [சபையோர், "ஆமென்" என்கின்றனர்.ஆசி] 548 "ஆகையால் நாம் கிறிஸ்துவுக்குள் மரித்து, வேதவாக்கியங்களின்படி நாம் ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படி சுதந்தரராகிறோம்." சபையை சேர்ந்து கொள்வதன் மூலமாயல்ல அல்லது செத்த நிபந்தனைகளை அல்லது அது போன்றவற்றை உருவாக்குவதனால் அல்ல. ஆனால் கிறிஸ்துவின் ஆவியினால் பிறப்பதன் மூலம் நாம் ஆபிரகாமினுடைய சந்ததியராயும், அவரோடு இராஜ்ஜியத்தில் உடன் சுதந்தரருமாயிருக்கிறோம். 549 அதன்பின்னர் நாம் தொடர்ந்து வாசித்துக் கொண்டே செல்லலாம், ஆகையால் இப்பொழுது இன்னும் சற்று அதிகமாக வாசிப்போம், "தேவன் ஒரு ஆணையையிடுகிறார்." இப்பொழுது 6ஆம் அதிகாரத்தின் 17-வது வசனம். அந்தப்படி, தேவனும்...சித்தமுள்ளாராய்... தேவனும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார். 550 ஓ, நாம் இப்பொழுது ஒரு சில நிமிடங்கள் அப்படியே தரித்திருப்போமாக. "தேவன் பரிபூரண சித்தமுள்ளவராய்." அவர் செய்ய வேண்டியதாயிருந்தது என்று அல்ல, ஆனால் இதை ஒரு நிச்சயமான காரியமாக்கும்படிக்கு செய்கிறார். 551 இப்பொழுது, தேவன் மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணி, எப்படி அவர் தம்மை உலகத்திற்கு வெளிப்படுத்தினார் என்பதை நாம் ஏற்கெனவே கண்டறிந்துள்ளோம். அவர் விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட ஸ்திரீயைக் கண்டபோது, "நான் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நான் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை. நீ போ, இனிப் பாவஞ் செய்யாதே" என்றார். அவர் வியாதியஸ்தரைக் கண்டபோது, அவர் அப்படியே செயல்பட்டிருக்க வேண்டிய விதத்தில் செயல்பட்டார், ஏனென்றால் அவர் தேவனாயிருந்தார். அவர் வியாதியஸ்தரை சுகப்படுத்தினார். அவர் மரித்தோரை எழுப்பினார். அவர் பாவங்களை மன்னித்தார். அவர்கள் எப்படி இருந்த போதிலும், எத்தனை பேராயிருந்த போதிலும், எப்படி பின்வாங்கிப் போயிருந்தாலும் பொருட்படுத்தாமல், அவர்கள் மனப்பூர்வமாய் வந்து கேட்பவர்களாயிருந்தால், எப்படியும் அவர் அவர்களை மன்னித்தார். 552 இப்பொழுது கவனியுங்கள். தேவன் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எந்த ஒரு முறையாவது ஒரு விதமாக செயல்பட்டிருந்தால், அதே சூழ்நிலை மீண்டும் எழுப்புமேயானால், அவர் முதல் முறை செயல்பட்டது போன்றே இரண்டாம் முறையும் அவர் செயல்பட வேண்டியவராயிருக்கிறார், இல்லையென்றால் அவர் அநீதியுள்ளவராயிருக்கிறார். புரிகிறதா? நீங்கள் பாவத்தில் எவ்வளவு மோசமாக இருந்தாலும், நீங்கள் எவ்வளவுதான் குனிந்து போயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அவர் அந்த விழுந்துபோன ஸ்திரீயினிடத்தில் செயல்பட்டது போன்றே உங்களிடத்திலும் அவர் செயல்பட வேண்டியவராயிருக்கிறார், இல்லையென்றால் அவர் அப்பொழுது தவறாக செயல்பட்டார் என்பதாகும். தேவனுடைய நடத்தை அவருடைய தன்மையாயும், அவர் என்னவாயிருக்கிறார் என்பது அவருடைய நடத்தையை அறிவிக்கிற அவருடைய தன்மையிலும் உள்ளது. 553 அந்தவிதமாகத்தான் நீங்களும் இருக்கிறீர்கள், உங்களுடைய ஜீவியத்தின் நடத்தை நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்பதைச் சொல்லுகிறது. நாம் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு பாடத்தினூடாக சென்று பார்த்தபோது, மெத்தோடிஸ்டு ஜனங்கள், "நீங்கள் சத்தமிட்டபோது, நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்கள்" என்று கூற விரும்பினர் என்பதைப் பார்த்தோம். பெந்தேகோஸ்தேக்களோ, "நீங்கள் அந்நிய பாஷையில் பேசின போது, நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்கள்" என்று கூறுகின்றனர். பென்சில்வேனியாவில் உள்ள குலுங்கி ஆடும் ஸ்தாபனத்தவர்கள், நீங்கள் குலுங்கி ஆடும்போது, நீங்கள் அதைப் பெற்றுக்கொண்டீர்கள் என்று கூறினர். அவர்கள் எல்லோருமே தவறாயிருக்கிறார்கள் என்பதை நாம் கண்டறிகிறோம். உங்களுடைய ஜீவியமே அதை அறிவிக்கிறது. நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்பதை உங்களுடைய தன்மை அறிவிக்கிறது. ஒரு மனிதன் தன்னுடைய கிரியைகளினாலே அறியப்படுகிறான், உங்களுடைய ஜீவியம் என்னவாயிருந்தாலும் சரி. 554 நீங்கள், "உங்களுடைய ஜீவியம் மிக சத்தமாகப் பேசுகிறது, எனவே நான் உங்களுடைய வார்த்தைகளைக் கேட்க முடியவில்லை" என்ற அந்த பழைய கதையைக் கேட்டிருக்கிறீர்கள். ஆகையால் நீங்கள் என்னவாயிருந்தாலும், நீங்கள் என்னவாயிருந்தாலும் சரி, நீங்கள் ஜீவிக்கிற ஜீவியம் உங்களுக்குள்ளாக என்ன விதமான ஒரு ஆவி இருக்கிறது என்பதைக் காண்பிக்கிறது. 555 ஆகையால் நீங்கள் தவறான காரியத்தை... போலியாக பாவனை செய்யலாம், இல்லையென்றால் சரியான காரியத்தை போலியாக நடத்துக் காட்டலாம், நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக நடிக்கலாம். ஆனால் பாரமானது வைக்கப்படும்போது, சீக்கிரத்தில் ஒரு நேரம் வரும் போது, அப்பொழுது நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்பதை அது காண்பிக்கும். ஒரு சங்கிலிக்கு அதனுடைய பலவீனமான இணைப்பிலேதான் அதனுடைய பலமேயுள்ளது. 556 தேவ குமாரனாகிய கிறிஸ்து சோதனைக்குட்படுத்தப்பட்டபோது, அவர் என்னாவாயிருந்தார் என்பதை அது காண்பித்தது. நிச்சயமாக. நீங்கள் சோதனைக்குட்படுத்தப்படும்போது, அது நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்பதை நிரூபிக்கும். உங்களுடைய ஜீவியம் உங்களுடைய உட்புறத்தில் என்ன உள்ளது என்பதையே எப்பொழுதும் பிரதிபலிக்கிறது. சீக்கிரத்தில் உங்களுடைய பாவங்கள் உங்களை வெளிப்படுத்திவிடும் என்பது நிச்சயம். அதைத்தான் நாம் கூற முயற்சித்துக்கொண்டிருக்கிறோம். 557 இயேசு, பரிசுத்த யோவான் 5:24-ல், "கேட்கிறவன்," என்று கூறினார். குலுக்குகிறவன் அல்ல, பேசுகிறவன் அல்ல.... "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்." 558 அது உங்களுடைய விசுவாசமாயிருக்கிறது. உங்களுடைய விசுவாசம், உங்களுடைய உதடுகளினால் அறிக்கை செய்யப்பட்டு, கேட்கக் கூடிய ஜனங்களுக்கு வெளிப்படுகிறது, ஆனால் உங்களுடைய ஜீவியம் எல்லோருக்கும் முன்பாக வெளிப்படையாயிருக்கிறதே. ஆகையால் நீங்கள் எவ்வளவுதான் இதைச் செய்ய முயன்றாலும், இதைச் செய்ய முயன்றாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அது ஒரு போதும் கிரியை செய்யாது. அது உங்களுக்குள்ளாக இருக்க வேண்டும். அது முழு கதையின் உண்மையான கருப்பொருளாயுள்ளது. உங்களுடைய இரட்சகரான உயிர்த்தெழுந்த கிறிஸ்துவில் உள்ள உங்களுடைய தனிப்பட்ட விசுவாசம்; அதாவது அவர் தேவனுடைய வலது பாரிசத்தில் இருந்துகொண்டு இந்தக் காலையில், நீங்கள் இங்கே ஒரு சாட்சியாக அவருடைய ஸ்தானத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறதுபோல, உங்களுடைய ஸ்தானத்தில் அவர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். ஒரு சாட்சி என்பது யாரோ ஒருவருக்குப் பதிலாக செயல்படுவதாகும், உங்களுக்காக ஒரு சாட்சியாக நிற்பது என்பதாகும். கிறிஸ்துவுக்குள்ளாக உங்களுடைய சாட்சி என்னவாயிருக்கிறது என்பதை உங்களுடைய ஜீவியம் இங்கே பிரதிபலிக்கிறது போல, அது அங்கும் பிரதிபலிக்கிறது, அது இங்கும் பிரதிபலிக்கிறது. அவர் அங்கே மேலே இருக்கிறார், அவர் உங்களுக்காக என்னவாயிருக்கிறார் என்ற காரணத்தால், இங்கேயும் அங்கேயும் பிரதிபலிக்கிறார். ஆகையால் நீங்கள். உங்களுடைய விசுவாசத்தினால் நீங்கள் இரட்சிக்கப் பட்டிருக்கிறீர்கள், அதனால் மாத்திரமேயாகும். ஆகையால் உணர்ச்சிப் பரவசமடைதல்கள், உணர்ச்சி வசப்படுதல்கள், உணர்வுகள், எந்தக் காரியத்திற்குமே அதில் இடமே கிடையாது. இப்பொழுது, இல்லை... 559 நான் இந்த உணர்ச்சிவசப்படுதல்களில் நம்பிக்கைக் கொள்வதில்லை என்று இப்பொழுது தவறாக எண்ணிக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக. ஆனால் நாம் இப்பொழுது என்னவாயிருக்கிறோம் என்பதையும், அது உணர்ச்சிவசப்படுதலைக் கொண்டதல்ல என்பதையுமே இந்த நாளின் இந்த ஜனங்களுக்கு மனதில் பதிய வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். பிசாசு அந்தக் காரியங்களை எடுத்துக்கொண்டு, ஜனங்களோடு காட்டுத்தனமாக சென்று, அவர்களுடைய நித்திய பயண இலக்கை உணர்ச்சிவசப்படுதலின் மேல் அடிப்படையாக வைக்க அனுமதித்துவிட்டான். சத்தமிடுதல், அந்நிய பாஷையில் பேசுதல், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சபைக்குச் செல்லுதல், ஒரு கிறிஸ்தவனைப் போல செயல்படுதல் போன்ற எந்த ஒன்றுக்குமே அந்த நாளில் எந்த ஒரு சம்பந்தமுமிராது. "ஒரு மனிதன் மீண்டும் பிறந்தாலொழிய" உங்களுடைய ஜீவியம் நீங்கள் உட்புறத்தில் என்னவாயிருக்கிறீர்கள் என்பதையே பிரதிபலிக்கிறது, பாருங்கள், உங்களுடைய உணர்ச்சிவசப்படுதல்களையல்ல. 560 உங்களுடைய கரங்களில் இரத்தம் இருக்க கூடும், உங்களால் அந்நிய பாஷையில் பேசக் கூடும், உங்களால் வியாதியஸ்தரை சொஸ்தமாக்கக்கூடும், நீங்கள் உங்களுடைய விசுவாசத்தினால் மலைகளை பெயர்க்கக் கூடும், அதே சமயத்தில் அப்படியிருந்தும் நீங்கள் பிரயோஜனமில்லாதிருப்பீர்கள். I கொரிந்தியர்.13. புரிகிறதா? அது தேவனிடத்திலிருந்து வருகிற ஒரு பிறப்பின் மூலம் ஏதோக் காரியம் சம்பவித்திருக்க வேண்டும், தேவனே புதியப் பிறப்பை உங்களுக்குள் கொண்டு வந்து, தம்முடைய ஒரு பாகத்தை உங்களுக்கு அளிக்கிறார். அப்பொழுதே அந்தக் காரியங்கள் இருக்கின்றன. நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாயிருக்கிறீர்கள். "நான் அவர்களுக்கு நித்தியத்தை அளிக்கிறேன்." 561 நாம் "நித்தியம்" என்ற வார்த்தையை ஆராய்ந்துப் பார்த்தோம். சதாக்காலம் என்பது "ஒரு குறிப்பிட்ட காலமாகும்." நித்தியம் என்பதோ என்றென்றைக்கும், என்றென்றைக்கும், என்றென்றைக்கும் என்பதாய் உள்ளது, ஆனால் ஒரே ஒரு நித்தியம் தான் உண்டு. நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளுகிறீர்கள் என்பதை நாம் கண்டறிகிறோம், அது கிரேக்க வார்த்தையில் ஸோயீ என்று உள்ளது, அது, "தேவனுடைய ஜீவன்" என்று பொருள்படுகிறது. நீங்கள் தேவனுடைய ஜீவனின் பாகத்தைப் பெற்றுக்கொள்கிறீர்கள், அது உங்களை ஒரு ஆவிக்குரிய தேவனுடைய குமாரனாக ஆக்குகிறது, தேவன் நித்தியமானவராயிருப்பது போல நீங்களும் நித்தியமானவர் களாயிருக்கிறீர்கள். உங்களுக்கு முடிவே கிடையாது, நிறுத்திவிட எந்த இடமும் கிடையாது, ஏனென்றால் உங்களுக்கு துவங்குவதற்கு என்று எந்த இடமும் இல்லாதிருந்தது. துவக்கம் என்ற ஒன்று உள்ள எந்தக் காரியத்திற்கும் ஒரு முடிவு உண்டு. துவக்கமேயில்லாததற்கு முடிவே கிடையாது. 562 அந்த விலையேறப் பெற்ற வார்த்தையை நாம் எப்படியாய் விரும்புகிறோம்! எப்படியாய் கிறிஸ்தவன் பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்தில் நிலைநாட்டப்பட்டிருக்க வேண்டுமேயன்றி, இடம்விட்டு இடம் என்றோ, பல்வேறு சபைகளில் சேர்ந்து கொள்ளுதல் என்று அலகழிக்கப்படக் கூடாது. நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருக்கும் வரையில் நீங்கள் விரும்புகிற எந்த சபையிலாவது உறுப்பினராயிருப்பது சரிதான். ஆனால் முதலில் முன்னிலைப்படுத்த வேண்டிய முதல் காரியமே, தேவன் உங்களோடு இனத்தாரானது போல உங்களை தேவனுடைய இனத்தானாகும்படிச் செய்கிறது அந்தப் பிறப்பேயாகும். 563 உங்களை உயிரோடு எழுப்பும்படியாகவே இனத்தாரானார். அவர் உங்களை உயிரோடு எழுப்புவதற்கு முன்பு, அவர் உங்களுக்கு நித்திய ஜீவனை தர வேண்டியவராயிருக்கிறார். அப்பொழுது உங்களை உயிரோடெழுப்புவதற்கு, மரணத்தை ஏற்றுக் கொள்ள தேவன் இனத்தாராக வேண்டியதாயிருந்தது. ஆகையால் நீங்கள் உயிர்த்தெழுதலின் வரிசையில் செல்ல, நீங்கள் அவருக்கு இனத்தாராக வேண்டியதாயுள்ளது. அது என்னவாயிருக்கிறது என்று உங்களுக்குப் புரிகிறதா? அது ஒரு மாற்றிக்கொள்ளுதலாய் உள்ளது. நீங்கள் தேவனாகும்படிக்கு, தேவன் உங்களைப் போலானார். புரிகிறதா? நீங்கள் தேவனுடைய கிருபையினால் அவருடைய ஒரு பாகமாகி நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி தேவன் உங்களுடைய ஒரு பாகமானார், அவ்வளவுதான். 564 அப்படியே ஒரு அழகான காட்சி, ஓ, நாம் அதை விரும்புகிறோம். இப்பொழுது, தேவனும்... சித்தமுள்ளவராய்... 565 அவ்வாறு இருந்திருக்க வேண்டியதில்லை, ஆனால் அவர் அதற்கு சித்தமுள்ளவராயிருந்தார். நான் அதைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், நம்முடைய தேவன் சித்தமுள்ள வராயிருக்கிறார் என்பதற்கு நீங்கள் மகிழ்ச்சியடையவில்லையா? பாருங்கள். அவர் நீடிய பொறுமையுள்ளவராயில்லாமலிருந்தால் என்னவாயிருக்கும் என்னவாயிருக்கும்? ஆவியின் கனி என்றால் என்ன? அன்பு, சந்தோஷம், விசுவாசம், சமாதானம், நீடிய பொறுமை. அதுவே உங்களுக்குள்ளாக இருக்கிற ஒரு தேவனுடைய பாகமாகும். பொறுமையாக இருக்க முடிந்து, ஒருவர் பாரங்களை ஒருவர் சகித்துக் கொள்ளுதல். தேவன் கிறிஸ்துவினிமித்தமாக உங்களை மன்னித்தது போல, ஒருவரையொருவர் மன்னித்தல். உங்களுக்குள்ளாக இருக்கிற தேவனுடைய ஆவியே அந்த விதமாகச் செய்கிறது. தேவன் இங்கே பூமியின் மேலிருந்தபோது, உங்களைப் போலாகி, பாவமாகி, உங்களுடைய பாவத்தை அவர் ஏற்றுக்கொண்டு, உங்களுக்காக அதை சுமந்து, அதற்கான உங்களுடைய தண்டனையின் அபராதத்தையும் செலுத்தினார். தேவன் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து, நம்முடைய பாரங்களை சகித்துக்கொண்டிருக்கிறார். 566 ஆகையால் அவர் ஒரு நல்ல தேவனாயிருக்கிறார். உங்களுக்கு குறிப்பிட்டக் காரியங்கள் உங்களுடைய வழியில் தேவையாயிருந்தால், அதைச் செய்ய தேவன் போதுமான நல்லவராயிருக்கிறார். அவர் உங்களை மகிழ்ச்சியாக்க விரும்புகிறார். அவர் அதைச் செய்ய விரும்புகிறார். அவர், அவர் அன்பாயிருக்கிறார், அவருடைய மகத்தான அன்பு உங்களுக்குத் தேவையான காரியங்களை நீங்கள் பெற்றுக்கொள்ளும்படிச் செய்ய, அவரை சில நேரத்தில் இறங்கி வரும்படிக்கு வற்புறுத்துகிறது. 567 உயிர்த்தெழுதலுக்குப் பின்னர் தோமாவைப் பாருங்கள். தோமா விசுவாசிக்க மனதில்லாதிருந்தான். ஓ, அவர் இன்றைக்கும் தோமாவைப் போன்றே அநேகப் பிள்ளைகளை உடையவராயிருக்கிறார். ஆனால் தோமா, "இல்லை. இல்லை. நான் சில அத்தாட்சிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நான் என்னுடைய கரங்களை அவருடைய விலாவில் போட்டுப்பார்க்க வேண்டும், அவருடைய... நான் அதை விசுவாசிக்கும் முன்னே, அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தில் என்னுடைய விரல்களையிட்டுப் பார்க்க வேண்டும். நீங்கள் என்னக் கூறினாலும் நான் கவலைப்படமாட்டேன்" என்றான். பாருங்கள், அவன் முழுவதும் வேத ஒழுங்கிற்கு அப்பொழுதே அப்பாற்பட்டவனாயிருந்தான். நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். ஆகையால் அவன், "அதை நிரூபிக்க எனக்கு ஒருவிதமான அத்தாட்சி வேண்டும்" என்றான். 568 இயேசு பிரசன்னமானார், அவர் நல்லவராயிருக்கிறார், அவர், "தோமாவே, வா, அதுதான் உனக்கு வேண்டுமானால், இதோ நான் இங்கிருக்கிறேன். நீ அதை கண்டு அறிந்து கொள்" என்றார். 569 அந்த விதமாகத்தான் நாம் இருக்கிறோம். நாம், "கர்த்தாவே, நான் அந்நிய பாஷையில் பேச வேண்டும். நான் நான் சத்தமிட வேண்டும். நான்..." என்று கூறுகிறோம். 570 அப்பொழுது அவர், "ஓ, தொடர்ந்து போங்கள். நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ள நான் அனுமதிப்பேன்" என்கிறார். அவர் நல்லவராயிருக்கிறார். 571 ஆகையால் தோமா தன்னுடைய கரங்களை அவருடைய விலாவிலேப் போட்டு, பின்னர் அவன், "ஓ, அது என்னுடைய ஆண்டவர், என்னுடைய தேவன்" என்றான். 572 அதற்கு அவரோ, "இப்பொழுது தோமாவே, நீ கண்டதினால் விசுவாசிக்கிறாய். ஆனால் எந்த அத்தாட்சியுமில்லாமல் அதே சமயத்தில் அதை விசுவாசிக்கிறவர்களுடைய பலன் எவ்வளவு பெரியதாயிருக்கிறது" என்றார். அந்நிலையில்தான் நீங்கள் இருக்கிறீர்கள். அங்குதான் நாம் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். "ஒன்றையுமே காணாதிருந்து, அதே சமயத்தில் அதை விசுவாசிக்கிறவர்களுக்கு அவர்களுடைய பலன் எவ்வளவு பெரியதாயிருக்கிறது." அது நாம் அதை ஏற்றுக் கொள்கிறோம் என்ற விசுவாசத்தின் செய்கையாயுள்ளது. 573 இப்பொழுது, விசுவாசிகளை அடையாளங்கள் பின் தொடருகின்றன என்று நான் விசுவாசிக்கிறேன், ஆனால் நாம் முதன்மையான காரியங்களை முதலில் வைப்போமாக. இது இல்லாமலேயே நீங்கள் அடையாளங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். உங்களால் முடியும் என்று பவுல் கூறினார். அவன், "நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேச முடிந்தாலும், நான் ஒன்றுமில்லை. நான் என்னுடைய விசுவாசத்தினாலே மலைகளைப் போக்க முடிந்தாலும், நான் ஒன்றுமில்லை. என்னால் வேதாகமத்தை புரிந்துகொள்ள முடிந்து, ஒரு குறிப்பிட்ட வழியில் என்னால் எல்லா தேவனுடைய இரகசியங்களையும் அறிந்துகொள்ள முடிந்தாலும், நான் ஒன்றுமில்லை " என்றான். பருங்கள், அது பரிசுத்த ஆவியாயில்லாமல், பரிசுத்த ஆவியின் வரங்களாயிருக்கின்றன. 574 பரிசுத்த ஆவியே தேவனாயிருக்கிறது. தேவன் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, பொறுமை என்பதாய் இருக்கிறார். அது தேவனுடைய ஆவியாய் இருக்கிறது. அந்த விதமாகத்தான் தேவன் அந்த ஆவியினூடாக கடைசி நாட்களில் எழும்புகிறார். 575 இப்பொழுது, "சித்தமாயிராமல்..." ...தேவனும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்கு... பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய்... ...தேவன். சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்கு... பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய்... யார் சுதந்தரராயிருக்கிறார்கள்? "நாம் கிறிஸ்துவுக்குள் மரித்து, ஆபிரகாமின் சந்ததியாராயும், சுதந்தரராயுமிருக்கிறோம்."ஓ, அது மனதில் பதிகிறதா? நாம் ஒரு ஆணையுறுதியின் வாக்குத்தத்தத்தின் மூலமாக தேவனுடைய இராஜ்ஜியத்தின் சுதந்தரராயிருக்கிறோம். தேவன் ஆணையிட்டிருக்க வேண்டியதில்லை. அவருடைய வார்த்தை பரிபூரணமானதாயிருக்கிறது. ஆனால் அவரும் கூட தம்மில்தாமே ஆணையிட்டார், ஏனென்றால் அவரிலும் பெரியவர் ஒருவருமேயில்லாததாயிருந்தது. 576 அப்படியே ஒரு நிமிடம், நாம் தொடர்ந்து வாசிக்கையில், கவனியுங்கள். தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தை... ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார். 577 "மாறாத" மாற முடியாதது. தேவனால் மாற முடியாது. அவர் மாறாதவராய்த் தரித்திருக்க வேண்டும். தேவன் சுகவீனமான ஒரு நபரை சுகப்படுத்தியிருப்பாரேயானால், அப்பொழுது அவரால் அவருடைய தன்மையை ஒருபோதும் மாற்றவே முடியாது. தேவன் ஒரு பாவியை, ஒரு விபச்சாரியை மன்னிக்கிறார், எனவே அவரால் தம்முடைய தன்மையை ஒருபோதும் மாற்றிக்கொள்ளவே முடியாது. மாறாத, மாறாத தேவனுடைய வார்த்தை . தேவன் ஒரு இடத்தில், "நானே, உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிற கர்த்தர்" என்று கூறினார். அவர் அதனோடு தரித்திருக்க வேண்டும், ஏனென்றால் அவர் முடிவற்றவராயிருக்கிறார். அவர் ஆதி முதல் அந்தம் மட்டும் அறிந்துள்ளார். 578 இப்பொழுது, என்னால், "நான் இதைச் செய்வேன்" என்று கூறமுடியும். வேதமோ, "ஆண்டவருக்குச் சித்தமானால்" என்று கூற வேண்டும் என்று உரைத்துள்ளது. ஏனென்றால் நான் ஒரு அழிவுள்ளவனாயிருக்கிறேன். எனக்குத் தெரியாது. சில சமயங்களில் நான் என்னுடைய வார்த்தையை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டியதாயிருக்கும், ஆனால் தேவனால் அவருடையதை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியாது. அவர் தேவனாயிருக்கிறார். 579 அவர், "நீ விசுவாசிக்கக் கூடுமானால்" என்ற ஒரு காரியத்தை மாத்திரமே முறையிட்டார். ஓ, என்னே ! "நீ விசுவாசிக்கக் கூடுமானால், எல்லாம் கூடும்" என்றார். "நீ விசுவாசிக்கக் கூடுமானால்" அவ்வளவுதான். "நீ, உன்னால் கூடுமானால்,'' அங்குதான் கேள்வியே உள்ளது. ஆனால் கேள்வி தேவனுடைய வார்த்தையின் பேரில் அல்ல, ஏனென்றால் அவருடையதோ மாறாதது, அவரால் மாற முடியாது. எவ்வளவு அற்புதம்! 580 நாம் தொடர்ந்து வாசிக்கையில், இப்பொழுது கவனியுங்கள். இரண்டு மாறாத விசேஷங்களினால். எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார். இயலாது! இயலாமை மற்றும் மாறாத இரண்டுமே நடைமுறையில் ஒரே வார்த்தையாயுள்ளது; மாற முடியாது, அசைக்க முடியாது. அது என்றென்றைக்குமாய் தரித்திருக்க வேண்டும். மாற்றப்பட முடியாது, மாறாத மற்றும் இயலாத என்பவைகள். ... இரண்டு, இரண்டு மாறாத விசேஷங்களினால்... எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார். "நாம் இரண்டு காரியங்களைப் பெற்றுள்ளோமா?" ஆம், முதலில் அவர் அதைச் செய்வார் என்று அவருடைய வார்த்தை உரைத்தது. இரண்டாவதாக அவர் அதைச் செய்வார் என்று அதன் பேரில் அவருடைய ஆணையுறுதி இருந்தது. ஓ, என்னே ! 581 நாம் என்ன விதமான ஜனங்களாய் இருக்க வேண்டும்? நாம் ஏன் கிட்டத்தட்ட முன்னும் பின்னும் அலகழிக்கப்பட்டு, சுற்றித் திரிகிற, உலகத்தின் காரியங்களை ஏற்றுக்கொண்டு, இந்த 1957-ன் ஆண்டில் ஓட்டத்தில் உள்ள நவீன கிறிஸ்தவர்மார்க்கத்தைப்போல செயல்படுகிறவர்களாயிருக்க வேண்டும்? நாம் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனை அவருடைய வார்த்தையின்படி ஏற்றுக்கொள்ளுகிற பண்டைய மாதிரியானவர்களைப் போன்றிருக்க வேண்டும். "தேவன் அவ்வண்னமாய்க் கூறியிருந்தால், அதுவே அதற்கு தீர்வாகிறது.'' 582 ஆபிரகாம், அவனுக்கும், அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டன, அவன் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைத்தான். ஏனென்றால் அது தேவனுடைய வாக்குத்தத்தமாயிருந்தது என்றும், தேவனால் பொய்யுரைக்க முடியாது என்பதையும் அறிந்திருந்தான். அவர் அதை அவனுக்கு வாக்குப்பண்ணினார், அவன் அதை விசுவாசித்தான். வருடங்கள் கடந்து சென்றபோதும், மாம்சபிரகாரமான கண்ணுக்கு வாக்குத்தத்தத்தை அடைவது காலங்கடந்ததாய் தென்பட்ட போதிலும், அது ஆபிரகாமுக்கோ மிக நெருக்கமானாதாகவே மாறினது. 583 விசுவாசத்தில் பலவீனமாயிருந்து, "பரவாயில்லை, ஒரு வேளை தெய்வீக சுகமளித்தல் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே இல்லாமலிருக்கலாம். நான் தவறாக உரைத்திருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு காரியமே இல்லாமலிருக்கலாம். நான் என்னுடைய எல்லா கருத்துக்களிலும் தவறாய் இருந்து வந்திருக்கலாம்" என்று கூறலாம். அப்பொழுது நீங்கள் இன்னமும் மீண்டும் பிறந்திருக்கவில்லை என்ற ஒரு காரியத்தையே அது காண்பிக்கிறது. "ஏனெனில்..." 584 நாம் கடந்த ஞாயிறு இந்த அதிகாரத்தில் சற்று பின்னோக்கிப் பார்த்தோம். "ஏனெனில், ஒரு தரம் பரம ஈவை ருசிபார்த்தும், மறுதலித்துப் போன ஒரு மனிதனை மனந்திரும்புதற்கேதுவாய் அவனை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். முற்றிலுமாக, முற்றிலும் கூடாத காரியமே! தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான், ஏனெனில் தேவனுடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது... அவன் பாவஞ் செய்யமாட்டான் தேவனுடைய வித்து தேவனுடைய வார்த்தையாய் உள்ளது. "விசுவாசம் கேட்பதனால், வார்த்தையைக் கேட்பதனால் வரும்; 'பலியானது செலுத்தப்பட்டாயிற்று. அது முற்று பெற்றுவிட்டது" 585 இப்பொழுது நீங்கள் தவறு செய்தால், தேவன் அதற்கான அபராதத்தை உங்களை செலுத்தச் செய்வார். ஆனால் நீங்கள் செய்தால், நீங்கள் தவறாயிருந்தால், நீங்கள் அதை மனப்பூர்வமாய்ச் செய்யவில்லையென்றால். 10-வது அதிகாரம், 47-வது வசனம் என்று நான் நினைக்கிறேன், "சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால். ஆனால் நீங்கள் ஒருதரம் பிறந்த பிறகு, நீங்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டப் பிறகு, அதனுடைய அறிவையல்ல, ஆனால் நீங்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, அது ஒரு உண்மையாகிவிட்டது. நீங்கள் காலத்திற்கும் நித்தியத்திற்குமான ஒரு தேவனுடைய பிள்ளையாயிருக்கிறீர்கள். தேவன் அதைச் செய்வார் என்று அவரே ஆணையிட்டார். 586 இயேசு, "என் வசனத்தைக்கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன். அவன் ஒருபோதும் நியாயத்தீர்ப்பிற்கு வரமாட்டான். அவன் மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்" என்றார். இப்பொழுது அந்த விதமான ஒரு ஆணையோடு, "நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவன் சித்தமுள்ளவராயிருந்தார்." 587 இப்பொழுது அவன் இங்கே என்ன கூறுகிறான் என்பதைக் கவனியுங்கள், பவுல் சபையோரிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். ... நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார். இல்லை , "சரி, பாப்டிஸ்டுகள் என்னை சரியாக நடத்தவில்லையென்றால், அப்பொழுது மெத்தோடிஸ்டுகளண்டைக்குச் செல்வேன்." பார்த்தீர்களா? நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடி வந்த நமக்கு...நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு... 588 இப்பொழுது இந்த வாசிப்பின் கடைசியில். அந்த நம்பிக்கை நமக்கு.. ஆத்தும நங்கூரமாயிருக்கிறது. அந்த நம்பிக்கை, தேவனுடைய ஆணையுறுதி, நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது. 589 நாம் சற்று நேரம் "திரை" என்பதன் பேரில் பேசுவோமாக. நாம் கடந்த ஞாயிறு இரவு அதை முழுமையாக பார்க்கவில்லை. 590 "திரைக்குள்." திரை என்பது மாம்சமாயுள்ளது. இந்த சபையில் தேவனை முகமுகமாய் காணாதபடி நம்மைத் தடுக்கிறதே திரையாய் உள்ளது. இருக்கைகளுக்கு அருகே இந்தக் காலையில் தங்களுடைய ஸ்தானங்களில் நின்று கொண்டிருக்கிற தூதர்களை நாம் காணாதபடிக்கு நம்மை தடுக்கிறதே திரையாய் உள்ளது. அவரைக் காணாதபடி நம்மைத் தடுப்பதே திரையாய் உள்ளது. நாம் திரைக்குப் பின்னால் மறைந்திருக்கிறோம், அந்தத் திரை மாம்சமாயிருக்கிறது. நாம் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாயிருக்கிறோம், நாம் தேவனுடைய பிரசன்னத்தில் இருக்கிறோம், "தேவனுடைய தூதர்கள் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கியிருக்கிறார்கள்.'' நாம் எல்லா நேரத்திலும் தேவனுடையப் பிரசன்னத்தில் இருக்கிறோம். "நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. நான் முடிவுபரியந்தம் எப்பொழுதும் உங்களுடனே கூட இருப்பேன். ஆனால் திரையே மாம்சமாயிருக்கிறது, அதுவே நம்மை அவருடைய பிரசன்னத்திலிருந்து தடுக்கிறது. ஆனால் நம்முடைய விசுவாசத்தினாலே ஆத்துமா, ஆவியினூடாக அவர் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அவர் நமக்கு அருகில் நின்று கொண்டிருக்கிறார். அவர் இப்பொழுது இங்கே இருக்கிறார். 591 ஒரு நாள் காலை தோத்தானிலே ஒரு வயோதிக தீர்க்கதரிசி இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டபோது, அவனுடைய வேலைக்காரன் வெளியே சென்று பார்த்துவிட்டு, "ஓதகப்பனே, முழு தேசமும் இந்த அந்நியரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதே" என்றான். 592 அப்பொழுது எலியா எழும்பி, "ஏன்? மகனே , அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்" என்றான். 593 அப்பொழுது அவன் தன்னுடைய கண்ணின் இமைகள் படபட எனத் துடிக்க சுற்றும் முற்றும் பார்த்தான். அவனால் ஒன்றையுமே காண முடியவில்லை . 594 அப்பொழுது எலிசா, "தேவனே, நீர் அவனுடைய கண்களைத் திறக்கும்படி அந்த திரையை நீக்கி போட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றான். அவனுடைய கண்களுக்கு முன்பாக இருந்த திரை விழுந்தபோது, அந்த தீர்க்கதரிசியைச் சுற்றிலும் அக்கினிமயமான இரதங்களும், மலை அக்கினிமயமான தூதர்களாலும் இரதங்களாலும் நிறைந்திருந்ததைக் கண்டான். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. 595 ஓ, அப்பொழுது கேயாசி, "எனக்கு இப்பொழுது புரிகிறது" என்று கூற முடிந்தது. பாருங்கள், திரை விழுந்து போயிற்று. அங்குதான் தடங்கலே இருக்கிறது. 596 இதோ அது உள்ளது. இதை உறுதியாக பற்றிக்கொள்ளுங்கள். திரையானது நாம் ஜீவிக்க வேண்டிய விதத்திலிருந்து நம்மை தடுக்கிறது. திரையானது நாம் உண்மையாகவே செய்ய விரும்புகிற காரியங்களிலிருந்து நம்மைத் தடுக்கிறது. தேவன் மாம்சத்தில் திரையிடப்பட்டிருந்தார், அந்தத் திரை இரண்டாக கிழிக்கப்பட்டது. தேவன் மீண்டும் தேவனானார். அவரை மறைத்திருந்த திரையிலிருந்து அவர் உயிர்த்தெழுந்தார். அதுவே கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலாயுள்ளது. இந்தத் திரையில் இப்பொழுது மறைக்கப்பட்டுள்ள நாம் விசுவாசத்தினால் நாம் அதை நம்புகிறோம், அதை ஏற்றுக்கொள்கிறோம் என்பதை நமக்கு நிரூபிக்கிறது. இந்தத் திரை இரண்டாக கிழிக்கப்படுகின்றபோது, "நான் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் அவரை அறிந்துள்ளேன்" என்று அறிந்திருக்கிறபடியால், நான் இந்த உறுதியோடு அவருடைய பிரசன்னத்திற்குள்ளாக செல்வேன். கர்த்தராகிய இயேசுவின் வருகையிலே, இந்தத் திரை மீண்டும் மேலே ஒரு பரிபூரணமாகப்பட்ட விதத்தில் மேலே உயர்த்தப்படும், அவர் தாவீதின் சிங்காசனத்தை எடுத்துக்கொள்ளும்போது, அவர் என்னுடைய இரட்சகராக, என்னுடைய தேவனாக இருக்கிறபடியால் நான் அவரோடு நடந்து சென்று, பேசுவேன். நாம் என்றென்றுமாய் ஜீவிப்போம். அது பரிபூரணமாக்கப்பட்ட பிறகு இந்தத் திரையில், ஆனால் இந்தத் திரை இதில் பாவத்தைக் கொண்டுள்ளது. அது எப்படியும் ... இந்த பூமியில் அந்த மகிமையின் சரீரத்தைக் குறித்து ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லையா? மறுபடியும் பிறக்க உங்களுடைய ஆத்துமா மரிக்க வேண்டியதாயிருப்பதுபோல், இந்த சரீரமும் மரிக்க வேண்டும். 597 மாம்சம் புசியாமலிருப்பது, இதைச் செய்யாமலிருந்து சரீரத்தை பரிபூரணப்படுவது அல்ல பரிபூரணம். நீங்கள் இந்த சரீரத்தை அவ்வாறு ஒருபோதும் பரிபூரணமாக்கவே முடியாது. நீங்கள் இதைவிட்டு விட வேண்டும், இதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்பது நியாயப்பிரமாணமாயுள்ளது. அது பிரமாணத்தின் கிரியைகளை கடைபிடிப்பவர்களாகும். நாம் இரட்சிப்பின் முறைமைகளின் கிரியைகளை கடைப்பிடிப்பதில் நம்பிக்கைக் கொள்கிறதில்லை. கிருபையினால் நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்றே நாம் அதை விசுவாசிக்கிறோம். அது நீங்களாக செய்வதல்ல. அதனோடு செய்வதற்கு உங்களுக்கு ஒன்றுமே கிடையாது. அதைச் செய்கிறது தேவனுடைய தெரிந்து கொள்ளுதலாயிருக்கிறது. "என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்." அது உண்மை . தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாயிருக்கும்படி உலகத்தோற்றத்திற்கு முன்னே பிதாவானவர் முன்னறிந்து முன்குறித்தவர்களை பெற்றுக்கொள்ளவே இயேசு வந்தார். ஆமென். "ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்." தேவனே அதைச் செய்கிறார். எனவே நீங்கள் தற்பெருமையாக பேசவே முடியாது. அது நீங்கள் செய்த ஒரு காரியம் அல்ல. தேவன் கிருபையினால் உங்களை இரட்சித்தார். நீங்கள் உங்களை இரட்சித்துக் கொள்ளவில்லை. நீங்கள் ஏதோ ஒன்றைச் செய்தால், அப்பொழுது நீங்கள் அதைக் குறித்து தற்பெருமையாகப் பேசலாம். ஆனால் உங்களுக்கு தற்பெருமையாகப் பேச ஒன்றுமே இல்லை. எல்லா துதிகளும் அவருக்கே செல்கிறது. அது அவராயுள்ளது. ஆகையால் அவர் உங்களுக்கு, "தம்முடைய பிள்ளைகள் என்றென்றுமே இழக்கப்பட்டு போக முடியாது என்பதற்கான உறுதியை ஆணையிட்டு" நிச்சய நம்பிக்கையாக அளிக்கிறார். 598 இப்பொழுது, அவர்கள் தவறு செய்வதற்காக கசையடிகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். நீங்கள் எதை விதைத்தீர்களோ அதையே அறுக்கிறீர்கள். நீங்கள் அதைப் புரிந்து கொள்ளுகிறீர்கள். இப்பொழுது நீங்கள் வெளியே போய் பாவம் செய்து, அதனால் கசையடியைப் பெற்றுக்கொள்ளலாம் என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். நீர் அவ்வாறு செய்யலாம் என்ற அந்த மனப்பான்மையைப் பெற்றிருந்தால், அது நீங்கள் ஒருபோதும் மீண்டும் பிறந்திருக்கவில்லை என்பதையே காண்பிக்கிறது. உங்களுக்கு அது புரிகிறதா? நீங்கள் தவறு செய்யும்படியான அந்த வாஞ்சையை உங்களுக்குள் இன்னமும் கொண்டிருந்தால், அப்பொழுது நீங்கள் இன்னமும் தவறாயிருக்கிறீர்கள். புரிகிறதா? "ஏனெனில் அவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார், அவர்கள். பழைய ஏற்பாட்டில் அந்த மிருகங்களின் இரத்தத்தின் கீழே, நியாயப்பிரமாணஞ் சார்ந்த நாட்களில், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டு வந்த பலிகள் ஒருபோதும் பாவத்தை நீங்கிப் போட முடியாமலிருந்தது. ஆனால் நாம் நம்முடைய கரங்களை அவருடைய தலையின் மீது வைத்து, நம்முடைய பாவங்களை அறிக்கை செய்து, தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறக்கும்போது, நமக்கு பாவத்தின் வாஞ்சையே இனிமேல் இருப்பதில்லை. பாவமானது உங்களைவிட்டு கடந்து சென்றுவிட்டது. அது காலத்திற்கும், நித்தியத்திற்குமானதாயுள்ளது. 599 நீங்கள் தவறுகளைச் செய்வீர்கள். நீங்கள் விழுந்து போவீர்கள். நீங்கள் மனப்பூர்வமாய் தவறு செய்வீர்கள். நீங்கள் சில சமயத்தில் வெளியே போய், சில காரியங்களைச் செய்வீர்கள். அது நீங்கள் இழக்கப்பட்டுவிட்டீர்கள் என்பதை பொருட்படுத்துகிறதில்லை. அது நீங்கள் திருத்துதலைப் பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள் என்பதையே பொருட்படுத்துகிறது. 600 என்னுடைய சிறு பையன், என்னுடைய பிள்ளைகளும் அநேக சமயங்களில் சில காரியங்களைச் செய்வார்கள். உங்களுடைய பிள்ளைகளும் கூட செய்கிறார்கள். அதாவது நீங்கள். அது உங்களுடைய விதிமுறைகளுக்கு விரோதமானது என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்கள் அதைச் செய்யும்போது, என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்கள் அதற்காக ஒரு கசையடியைப் பெற்றுக்கொள்ளப் போகிறார்கள், சில சமயங்களில் அது நல்ல பலமான கசையடியாகக் இருக்கக் கூடும். ஆனால் அது இன்னமும் உங்களுடைய பிள்ளையாகவே உள்ளது. நிச்சயமாக. 601 ஒரு முறை நித்திய ஜீவனைக் கொண்டு பிறந்த ஒரு மனிதன் மீண்டும் இழக்கப்பட்டுப் போவதென்பது கூடாதக் காரியமாய் உள்ளது. தேவன் இந்தியனைப் போன்று அரைகுறையாக அளிப்பவரல்ல. "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் நியாயத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான். நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்." அது தேவனுடைய வாக்குத்தத்தமாயுள்ளது. 602 இப்பொழுது நீங்கள் தொடர்ந்து சென்று, "ஓ, பரவாயில்லை , அப்படியானால் என்னால் அப்படியே செய்ய முடியும்...'' என்று கூறினால், நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறேனோ, அதையே நான் எப்பொழுதும் செய்கிறேன். ஆனால் நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருந்தால், நீங்கள் தவறாக இருக்கிற காரியத்தைச் செய்ய விரும்புகிறதில்லை, ஏனென்றால் உங்களுக்குள் அதே ஜீவன் அதே அஸ்திபாரமாய் உள்ளது. நீங்கள் தவறு செய்ய வேண்டும் என்று விரும்பினால், இங்கு உள்ளே தவறான காரியம் உள்ளது என்பதையே அது காண்பிக்கிறது. "ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் எப்படி சுரக்க முடியும்?" 603 ஆகையால் நீங்கள் எல்லோருமே ஏதோ ஒரு விதமான உணர்ச்சிவசப்படுதலின் பேரில் அல்லது மிகைப்படுத்தப்பட்ட ஏதோ ஒரு காரியத்தின் பேரில், மற்றொரு கிளர்ச்சியடைதலின் பேரில் குழப்படைந்து வருகின்றீர்கள். அதை மறந்துவிடுங்கள். பீடத்தண்டைத் திரும்பிச் சென்று, "தேவனே, என்னுடைய பழைய பாவ வாழ்க்கையை எடுத்துப் போட்டு, என்னுடைய முழு வாஞ்சையும் உம்பேரில் இருக்கும்படியான அப்படிப்பட்ட ஒரு நிலையில் என்னை வையும்...'' என்று கூறுங்கள். "தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான்," அது உண்மை. அதைச் செய்யும்படியான எந்த வாஞ்சையையும் அவன் கொண்டிருக்கவில்லை. 604 நிச்சயமாக, பிசாசு அவனுக்கு இங்கும் அங்கும் கண்ணி வைக்கலாம், ஆனால் அவனால் மனப்பூர்வமாய் செய்ய முடியாது. வேதம் அவ்வண்ணமாய்க் கூறியுள்ளது. பிசாசு அடிக்கடி அவனுக்கு கண்ணி வைக்கும். நிச்சயமாக, அவன் கண்ணி வைப்பான். அவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் மீதே கண்ணிகளை வீச முயன்றான். அவன் மோசேக்கு அதைச் செய்து, அவனைப் பிடித்தான். அவன் பேதுருவுக்குச் செய்து, அவனைப் பிடித்தான். அவன் அநேகருக்கு கண்ணி வைத்தான். ஆனால் பேதுருவும் கூட அவரை மறுதலித்தான், ஆனால் அதன் பின்னர் அவன் போய் மனங்கசந்து அழுதான். அவனுக்குள் ஏதோ ஒரு காரியம் இருந்தது. 605 புறாவானது பேழையிலிருந்து வெளியே அனுப்பப்பட்டபோது... காகம் வெளியே புறப்பட்டுச் சென்று, அது சுற்றும் முற்றும் கரைந்தது. அது பேழையிலிருந்தபோது சரியாயிருந்தது, ஆனால் அது வெளியே சென்றபோது, அதனுடைய சுபாவம் வித்தியாசமாயிருந்தது. அப்பொழுது அதனால் திருப்தியடையும்படிக்கு அது விரும்பின எல்லா செத்த பழைய பிணங்களையும் புசிக்க முடிந்தது. ஏன்? அது துவக்கத்திலிருந்தே ஒரு காகமாயிருந்தது. அது ஒரு தோட்டியாயிருந்தது. அது அசுத்தமானதாயிருந்தது. அது ஒரு மாய்மாலகாரனாயிருந்து புறாவைப் போல புறாவோடு அமர்ந்து கொண்டிருந்தது. புறா பறந்து செல்லக் கூடிய எந்த இடத்திற்கும் காகமும் பறந்து செல்ல முடிந்தது. ஆனால் புறா புசிப்பது போன்றே காகத்தாலும் சுத்தமான ஆகாரத்தைப் புசிக்க முடிந்தது. அதன் பிறகு அதனால் புறாவினால் புசிக்க முடியாத அழுகிப்போன ஆகாரத்தையும் புசிக்க முடிந்தது. ஏனென்றால் புறா ஒரு வித்தியாசமான பறவையாயிருக்கிறது. அது ஒரு வித்தியாசமான படைப்பாயிருக்கிறது. அது ஒரு புறாவாயிருக்கிறது. புறாவினால் அழுகிப் போன ஆகாரத்தை புசித்து செரிமானம் செய்ய முடியாது, ஏனென்றால் அதற்கு பித்தப்பையேக் கிடையாது. 606 தேவனுடைய ஆவியினால் பிறந்த ஒரு மனிதன் தேவனுடைய ஒரு புறாவாகிறான், அவனுடைய சுபாவம், அவனுடைய மாற்றம், அவனுடைய தோற்றம். ஆம் ஐயா. நீங்கள் காகத்தினுள் புறாவினுடைய ஆவியை வைத்தால், அப்பொழுது அது ஒரு போதும் ஒரு செத்தப் பிணத்தின் மேல் உட்காராது. அவன் தவறினால் உணர்த்தப்பட்டால், அவன் நிச்சயமாகவே துரிதமாக அதை விட்டு விலகி விடுவான். அவனால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. தேவனுடைய ஆவியினால் பிறந்த ஒரு மனிதன் அதைப் பொறுத்துக் கொள்கிறதில்லை. அவன் ஒரு மதுபான அருந்தக அறைக்கு தற்செயலாக ஏதோ ஒரு நேரத்தில் செல்லலாம், ஆனாலும் அவன் துரிதமாக அங்கிருந்து வெளியேறிவிடுவான். ஒரு ஸ்திரீ அவனை வசீகரித்து, அவனைத் திரும்பிப் பார்க்கும்படிச் செய்யலாம், ஆனாலும் அவன் தன் தலையை மீண்டும் திருப்பிக்கொள்வான். அவன் உடனடியாக அங்கிருந்து சென்றுவிடுவான். ஏன்? அவன் ஒரு புறாவாயிருக்கிறான். அது உண்மை . நீங்கள் அவனை ஏமாற்ற முடியாது. ஏனென்றால் அவன் அதை அறிந்திருக்கிறான். "என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கின்றன, அவைகள் அந்நியனுக்குப் பின் செல்லாது." அவன் துவக்கத்திலிருந்தே ஒரு புறாவாயிருக்கிறான். அதைக் குறித்து தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன், அங்கு உள்ளே ஏதோ ஒரு காரியம் உண்மையாகவே நங்கூரமிட்டிருக்கிறது. 607 இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். "தேவன் ஆணையிட்டார்." ஓ, அது... அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும் நங்கூரமாயிருக்கிறது. 608 "திரை." தேவன் இறங்கி வந்து, மாம்சத்தில் திரையிட்டுக் கொண்டார். என்ன செய்வதற்கு? தம்மைக் கான்பிப்பதற்கு. அவர் மறைத்துக்கொள்ள வேண்டியதாயிருந்தது, ஏனென்றால் நம்மால் அவரைக் காண முடியாது. அவர் திரைக்குப் பின்னே மறைந்திருந்தார். யார் அந்த திரையாயிருந்தது? இயேசு. "கிரியைகளைச் செய்கிறது நானல்ல, என் பிதா" என்று இயேசு கூறினார். "என் பிதா என்னில் வாசமாயிருக்கிறார். நான் கிரியை செய்கிறேன். இதுவரையில் பிதா கிரியை செய்கிறதையே நான் இங்கே செய்கிறேன்" என்றார். இங்கே அவர் திரையிட்டுக்கொண்ட ஒருவராக இருக்கிறார், அவர் மாம்சத்தில் நடந்த தேவன், இம்மானுவேல், தேவன் நம்மோடிருக்கிறார். "தேவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்து உலகத்தை தமக்கு ஒப்புரவாக்கிக் கொண்டார்." இதோ அவர் சுற்றி நடந்து கொண்டிருக்கிறார். 609 இப்பொழுது, அவர் திரும்பி வந்து நமக்குள் வாசம் செய்யும்படி, அவர் இறங்கி வந்து ஒரு பரிசுத்தமாகுதலைச் செய்து, இல்லை முன் ஏற்பாடு செய்து இல்லை கிருபாதாரபலியாக தன்னுடைய மரண பலியினூடாக பாவத்தின் கிரயத்தைச் செலுத்தினார். ஆகையால் நாம் கொண்டுள்ள விசுவாசம் ஒரு-ஒரு திரையிடப்பட்ட விசுவாசமாயிருக்கிறது, அல்லது ஒரு திரையிடப்பட்ட நபராய் உள்ளது. ஆகையால் நாம் இந்தத் திரையில் காண்கிற காரியங்களை நாம் நோக்கிப் பார்க்கிறதில்லை. திரை கல்வியறிவை உடையதாயிருக்கிறது, அது காரியங்களைச் செய்கிறது, காரியங்களைப் பேசுகிறது. அது ஒரு விஞ்ஞானப்பூர்வமான காரியமாய் உள்ளது. ஆனால் இங்கே உள்ளே வாசம் செய்கிற ஜீவனுள்ள தேவனுடைய ஆவியானது தேவன் அவ்வண்ணமாய் கூறியிருந்தால், அது இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்கிறது. அங்குதான் உங்களுடைய திரையிடுதல் உள்ளது. நாம் திரைக்குள் இருக்கிறோம். 610 இப்பொழுது, என்றோ ஒரு நாள் அவர் இந்தத் திரையை மேலே எழுப்புவார், மனிதனும் ஸ்திரீயும் கொண்டுள்ள பாலியல் வாஞ்சையினால் ஒரு ஸ்திரீயினிடத்தில் பிறந்ததையல்ல, ஆனால் தேவ சித்தத்தினால் அவர் பேச, அது நிறைவேறும். (சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய விரலை சுடக்கினார் -ஆசி.) அப்பொழுது நாம் அவருடைய சொந்த மகிமையான சரீரத்தைப் போன்ற ஒரு சரீரத்தைப் பெற்றுக் கொள்வோம். நாம் திரையிடப்படுவோம், ஆகையால் நாம் ஒருவரோடு ஒருவர் பேச முடியும், ஒருவருடைய கரங்களை ஒருவர் குலுக்க முடியும். 611 இப்பொழுது, நாம் இங்கிருந்து செல்லும்போது, அங்கு ஒரு கூடாரம், ஒரு ஆவிக்குரிய சரீரம் உண்டு, அது ஒரு மனுஷ சாயலில் உள்ளது, அது புசிக்கிறதில்லை, குடிக்கிறதில்லை, உறங்குகிறதில்லை, என்றென்றுமாய் விழித்திருக்கிறது. அங்குதான் நாம் செல்கிறோம். ஆனால் அவர்கள் பலி பீடத்தின் கீழேயிருந்து காத்துக்கொண்டு, கீழேத் திரும்பி வர, "கர்த்தாவே, எது வரைக்கும்? எது வரைக்கும்? என்று சத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் ஒருவரோடு ஒருவர் கரங்குலுக்க விரும்புகின்றனர். அவர்கள் கீழே அமர்ந்து, புசித்து, ஒருவரோடு ஒருவர் பேச விரும்புகிறார்கள். அவர்கள் மானிடர்களாயிருக்கிறார்கள். கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! 612 ஆதியிலே தேவன் மனிதனை தம்முடைய சொந்த சாயலில் உண்டுபண்ணின்போது, அவர் அவனை இந்தவிதமாகவே உண்டுபண்ணினார். அவர் ஒவ்வொருவரோடும் ஐக்கியங்கொண்டார், ஏனென்றால் நாம் ஒருவரையொருவர் அறிந்துள்ளோம். தேவன் நம்மை உண்டுபண்ணின காரியங்களை நாம் விரும்புகிறோம், ஏனென்றால் நாம் இந்த விதமாக உண்டாக்கப்பட்டோம். அவருடைய மகத்தான வருகையிலே, ஆயத்தமாயிருக்கிறவர்கள் என்றென்றும் இந்த விதமாய் இருப்பார்கள். அழிவில்லாதவர்களாய், நாம் அவருடைய சாயலில் நிற்போம். ஓகிறிஸ்துவின் நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! 613 நாம் அவரை, நம்முடைய சொந்த இரட்சகராக, நம்முடைய சுகமளிப்பவராக ஏற்றுக்கொள்ளுகிற காரணத்தினால், இப்பொழுது நாம் நம்முடைய இரட்சிப்பின் அச்சாரத்தை உடையவர்களாயிருக்கிறோம். இந்த மற்ற எல்லா ஊழியங்களும் காப்பீட்டுத் திட்டத்தின் பேரில் செலுத்தப்பட்ட பங்காதாயங் களாயிருக்கின்றன. ஆமென். காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் முன்வைத்த தொகை வரும் வரையில் அதன்பேரில் பங்காதாயங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். நிச்சயமாக. நீங்கள் பங்காதாயங்களை பெற்றுக் கொள்ளமுடியும். நாம் இப்பொழுது பங்காதாயங்களை எடுத்துக்கொண்டிருக்கிறோம். நாம் பங்காதாயங்களை எடுத்துக்கொண்டவுடனே, ஒரு காரியம், ஊதியம் மீண்டும் உயர்த்தப்படுகிறது. 614 ஒரு முறை ஒரு காப்பீட்டு முகவர் என்னிடத்தில், "பில்லி, நான் உங்களுக்கு ஒரு காப்பீட்டை விற்க விரும்புகிறேன்" என்றார். அதற்கு நான், "என்னிடத்தில் ஒன்று உள்ளதே" என்றேன். அப்பொழுது என்னுடைய மனைவியோ என்னை வித்தியாசமாக உற்று நோக்கினாள். 615 இப்பொழுது, காப்பீட்டிற்கு எதிராக ஒன்றுமில்லை. ஆனால் சில ஜனங்கள், "அதிக காப்பீட்டினால் வறுமையாய் இருக்கிறார்கள். ஆகையால், அவர்கள் சுற்றும் முற்றும் திரும்பினர். அவர் சொன்னார்... 616 என்னுடைய மனைவியோ, என்னை விநோதமாக உற்றுப் பார்த்துவிட்டு, "நீர் காப்பீடு வாங்கியுள்ளீரா?" என்று கேட்டாள். 617 நான், "நிச்சயமாக" என்றேன். அவள் அதைக் குறித்து ஒன்றையுமே அறிந்திருக்கவில்லை. 618 அவர், "பரவாயில்லை, பில்லி, நீர் எந்தவிதமான ஒரு காப்பீட்டை வாங்கியிருக்கிறீர்?" என்று கேட்டார். 619 அதற்கு நான், இவ்வாறு கூறினேன்: ஆசீர்வதிக்கப்பட்ட உறுதி, இயேசு என்னுடையவர்! ஓ, என்னே ஒரு தெய்வீக மகிமையின் முன்ருசி! இரட்சிப்பின் சுதந்தரவாளி, தேவனால் கிரயத்துக் கொள்ளப்பட்டவன், அவருடைய ஆவியில் பிறந்து, அவருடைய இரத்தத்தினால் கழுவப்பட்டவன். 620 அதற்கு அவரோ, "அது மிக நன்றாக உள்ளது, பில்லி," என்று கூறிவிட்டு, "ஆனால் அது உம்மை இங்கே கல்லறைத் தோட்டத்தில் வைக்காதே" என்றார். 621 அப்பொழுது நான், "ஆனால் அது என்னை வெளியேக் கொண்டு வரும். அதுதான் முக்கியக் காரியம்" என்றேன். மேலும் நான் அங்கே செல்வதைக் குறித்து கவலைப்படவில்லை. நான் அங்கிருந்து வெளியே வருவதைக் குறித்தேக் கவலைப்படுகிறேன். 622 அவர் கடைசி நாளில் என்னை தம்முடைய குமாரனின் சாயலில் மீண்டும் உயிரோடு எழுப்புவார் என்ற நித்திய தேவனின் ஆணையுறுதியினால் நான் அந்த உறுதியை உடையவனாயிருக்கின்ற காரணத்தால், நான் தைரியமாக நடந்து, ஒரு ஆறுதலையும், ஆத்தும் நங்கூரத்தையும் உடையவனாயிருப்பேன், அதாவது நான் இந்தத் திரையில் இருக்கும்போது, காணாத ஏதோ ஒன்று என்னை பற்றிப் பிடித்து அப்பாலுள்ள காலங்களின் கன்மலையில் நங்கூரமிட்டுள்ளது. தண்ணீர் அலையாய் எழும்பி, பெருங்காற்று வீசினாலும், அது எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணுகிறதில்லை. அது மரணமானாலும், நாசமோசங்களானாலும் அல்லது எந்தக் காரியமானாலும் தேவனுடைய அன்பிலிருந்து நம்மை பிரிக்கிறதில்லை. என் நங்கூரம் திரைக்குள்ளே பற்றிப் பிடித்திருக்கிறது. புயல்கள் எழும்பட்டும், புயல்கள் மோதியடிக்கட்டும். நாத்திகர்கள் வரட்டும். மீண்டும் பிறந்த விசுவாசியோ ஒரு நங்கூரத்தை உடையவனாயிருக்கிறான். உங்களால் இன்னமும் இந்தத் திரையினூடாக காண முடியாது. ஆனால் அவர் என்னை கடைசி நாளில் எழுப்புவார் என்ற வாக்குத்தத்த ஆணையுறுதியை அளித்துள்ள காலங்களின் கன்மலையாயிருக்கிறவரண்டை, என்னுடைய நங்கூரம் பற்றிப்பிடித்துள்ளது. 623 உங்களால் மரணத்தை நோக்கிப் பார்த்து, "உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம் எங்கே? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்" என்று கூற முடியும் என்பதில் வியப்பொன்றுமில்லையே, நாம் முன்னோடியானவரில் இருக்கிறோம். ஓ, என்னே! (நாம் அந்தப் பாடத்தைப் புரிந்துகொள்ளவேப் போகிறதில்லை ). நாம் நமக்கான ஒரு முன்னோடியானவரை உடையவர்களாயிருந்தோம். 624 ஒரு முன்னோடி. நீங்கள் எப்போதாவது பண்டைய மேற்கத்திய திசையைச் சார்ந்த பழைய வழித்தடங்களில் அந்நாட்களில் நடந்ததைக் கவனித்துள்ளீர்களா? (நான் அநேக சமயங்களில் அந்த பழைய வழித்தடங்களினூடாகச் சென்றிருக்கிறேன்.) ஒரு முன்னோடியா அல்லது சாரணரா? குதிரைகள் பூட்டிய பாரா வண்டியில் உள்ளவர்கள் தண்ணீரில்லாமல் மடிந்து கொண்டிருக்கையில், அந்த சாரணன் முன்னால் ஓடினான். அவன் அங்கே இந்திய பழங்குடி மரபின மக்களைக் கண்டான். அவன் அவர்களைப் பக்க வழியாய் கடந்து சென்றான். அப்பொழுது அவன் அங்கே ஒரு தண்ணீர் ஊற்று இருந்ததைக் கண்டான். எனவே அவன் துரிதமாகத் திரும்பி அந்த குதிரைகள் பூட்டிய பாரா வண்டியின் முதலாளிடம் வந்து, "குதிரைகளை வண்டியில் பூட்டுங்கள், ஒவ்வொருவரும் திடன் கொள்ளுங்கள், ஏனென்றால் மலைக்கு அப்பால் அங்கே ஒரு பெரிய தண்ணீர் ஊற்று உள்ளது" என்றான். அவன் ஒரு முன்னோடியாயிருந்தான். 625 இங்கே ஒரு முன்னோடியானவர் இருக்கிறார். மனிதன் ஒரு முறை பிசாசினால் சிக்குண்டு, அதிவேகமாய் சுடப்பட்டுக்கொண்டிருந்தான். ஆனால் யாரோ ஒருவர் அந்த இயந்திர துப்பாக்கிக் கூண்டையே கைப்பற்றி எடுத்துவிட்டார். அது இயேசுவாயிருந்தது. அந்த முன்னோடியானவர் நமக்கு முன்பாகச் சென்றுள்ளார். சாத்தான் அங்கே ஒரு இயந்திரத் துப்பாக்கியோடு நின்று கொண்டு, நம்மை கீழே சிக்க வைத்து, எப்பொழுதும் மரண பயத்தின் அடிமைத்தனத்தில் வைத்திருந்தான். அவர் அந்த ஊற்றைப் பாதுகாத்துக் கொண்டிருந்தார். நிச்சயமாக, அவர் அங்கிருந்தார். அவருக்கு கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது, ஏனென்றால் நாம் பாவஞ் செய்து, அதிலிருந்து தூரமாய் விரட்டப்பட்டிருந்தோம். ஆனால் அந்த முன்னோடியானவர், கிறிஸ்து உள்ளே வந்து அந்த கூட்டைக் கைப்பற்றினார். 626 நீங்கள், "கோட்டையைப் பிடியுங்கள், ஏனென்றால் நான் வந்து கொண்டிருக்கிறேன்" என்ற அந்தப் பழையப் பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? கோட்டையைப் பிடியுங்கள், வேறொன்றுமில்லை; நாம் அதைக் கைப்பற்றுவோமாக. நாம் அதை இனிமேல் பிடிக்க வேண்டியதில்லை. ஏனென்றால் கிறிஸ்து கோட்டையைக் கைப்பற்றிவிட்டார். அல்லேலூயா! வாசல் திறந்துள்ளது. "சுத்திகரிப்பிற்கு, அழுக்கின் சுத்திகரிப்பிற்காக தாவீதின் நகரத்தில் உள்ள தேவனுடைய வீட்டில் ஒரு திறந்த ஊற்று உள்ளது. நம்முடைய முன்னோடியானவர் நமக்காக அதற்குள் பிரவேசித்திருக்கிறார். 627 முன்னோடியானவர், அவர், "அங்கே அப்பால் ஒரு இடம் உண்டு, அங்கே நீங்கள் ஒரு போதும் வயோதிகமடையவேமாட்டீர்கள்" என்றார். அங்கே சரீரத்தில் சுருக்கங்களே இருக்காது. அங்கே நீங்கள் இங்கே உங்களுடைய கணவனுக்கு அருமையாக காணப்படும்படிக்கு பயன்படுத்தும் மேக்ஸ் பாக்டர்ஸ் நிறுவனத்தார் வெளியிடும் அழகு சாதன முக ஒப்பனைப் பொருட்களை அங்கே பயன்படுத்த வேண்டியதாயிராது. முன்னோடியானவர் அங்கு சென்றுள்ளார். நீங்கள் வயோதிகமாக, களைப்பாக, நடுங்கங் கொள்கிற ஒரு இடமே ஒருபோதும் அங்கே இல்லை. நீங்கள் ஒருபோதும் சுகவீனமடையாத ஒரு இடம் அங்கு உண்டு. அங்கே குழந்தைக்கு ஒருபோதும் ஒரு வயிற்று வலி கூட ஏற்படாது. அங்கே உங்களுடைய பல்லானது விழுந்து போக, நீங்களோ போலிப் பல்லைப் பொருத்திக் கொள்ள வேண்டியதில்லை. அல்லேலூயா! ஓ, அவருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! அவர் உள்ளே பிரவேசித்துவிட்டார், நாம் என்றோ ஒரு நாள் அப்பால் அவருடைய சாயலில் அழிவில்லாதவர்களாய் நிற்போம். நட்சத்திரங்களையும், சூரியனைக்காட்டிலும் அவர்கள் மிஞ்சிப் பிரகாசிப்பார்கள். நிச்சயமாக. முன்னோடி நமக்கு முன்பாக சென்றுள்ளார். நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். 628 இந்த மகத்தான முன்னோடியானவர் ஒரு வழியை உண்டுபண்ண நமக்கு முன் சென்றுள்ளார். அவர் ஆவியிலிருந்து தோன்றி, தேவனுடைய வானவில்லின் மகத்தான ஊற்றுகளாய், துவக்கமும், முடிவுமில்லாதவராயிருந்தார். அவர் என்றென்றுமே தேவனாயிருக்கிறார். இந்த ஒளிக்கதிர் புறப்பட்டுச் சென்றது. அது ஒரு அன்பின் ஒளிக்கதிராயிருந்தது, அதுவே முக்கிய ஒன்றான சிவப்பு நிறமாயிருந்தது. அதற்கு அடுத்த நிறம் பின் தொடர்ந்து வர, அது நீல நிறமாயிருந்தது, நீலம், உண்மை . அதற்கு அடுத்து மற்ற நிறங்கள் பின் தொடர்ந்து வர, அவைகள் ஏழு பரிபூரண நிறங்களினூடாக வந்தன, அவை இயேசு பேசின அந்த மகத்தான ஊற்றிலிருந்து அல்லது அந்த மகத்தான வைரத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற ஏழு தேவனுடைய ஆவிகளாயிருந்தன. இந்த நிறங்களை பிரதிபலிக்க அந்த மகத்தான வைரம் செதுக்கப்பட்டது. தேவன் வரங்களினாலும், அடையாளங்களினாலும், அதிசயங்களினாலும் தம்முடைய நன்மையையும், இரக்கத்தையும் நமக்கு மத்தியிலே பிரதிபலிக்கும்படிக்கு அவர் மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார். அந்த பெரிய முழு வானவில்லும் ஒரு ஆவிக்குரிய சரீரமாக மாறி, மனிதனைப் போன்ற சாயலில் உண்டாக்கப்பட்டது. அதே சமயத்தில் அவர் மனிதனாயிருக்கவில்லை ; அவர் இன்னும் மாம்சத்தை உடையவராயிருக்கவில்லை. அவர் ஒரு ஆவிக்குரிய சரீரமாயிருந்தார். 629 மோசே, "நான் உம்மைக் காண விரும்புகிறேன்" என்றான். தேவன் கன்மலையில் அவனை மறைத்து வைத்தார். 630 அவர் தம்முடைய முதுகு பக்கமாக திரும்பி கடந்து போனபோது, மோசே, "அது மனிதனின் பின்பாகம் போன்று காணப்பட்டது" என்றான். 631 அதன் பின்னர் என்ன நடந்தது? ஒரு நாள் அங்கே ஆபிரகாம் தன்னுடைய கூடாரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தான். நாம் இன்றிரவு அதைப் புரிந்துகொள்வோம். ஆபிரகாம் தன்னுடைய கூடாரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, தேவன் ஒரு மாம்ச சரீரத்தில் அவனிடத்திற்கு வந்தார். "ஓ" நீங்கள், "சகோதரன் பிரான்ஹாம், அவர். அவ்வாறு இருந்தார்" என்று கூறுகிறீரா எனலாம். 632 அதற்கு முன்பே அவர் இங்கே மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஒரு மாம்ச சரீரத்தில் ஆபிரகாமைச் சந்தித்தார், அது தேவனாயிருந்தது என்பதை நாம் கண்டறியலாம். நிச்சயமாக, அது தேவனாயிருந்தது. அவர் மாம்சத்தில் தேவனாயிருந்தார். 633 நீங்களோ, "அப்படியானால் சகோதரன் பிரான்ஹாம், அவர் ஏன் மீண்டும் திரும்பி வந்து பிறக்க வேண்டியதாயிருந்தது?" என்று கேட்கலாம். 634 அப்பொழுது அவர் பிறக்கவில்லை. அவர் ஒரு சரீரத்தை சிருஷ்டித்து, அதில் வாசம் செய்தார். மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவாயிருந்தார், அதாவது அவர் எருசலேமின் இராஜாவாயிருக்கிறார், அவர் சமாதானத்தின் இராஜாவாயிருக்கிறார்; அவருக்கு தகப்பனும், தாயும் இல்லாதிருந்தனர், மற்றும் நாட்களின் துவக்கமும், ஜீவனின் முடிவும் இல்லாதிருந்தது. இயேசுவுக்கு தகப்பனும் தாயும் இருந்தனர், அவருக்கு நாட்களின் துவக்கமும், ஜீவனின் முடிவும் உண்டாயிருந்தது. ஆனால் அவர், "மெல்கிசேதேக்கின் முறைமையின்படியாய்" உண்டாக்கப்பட்டார், மெல்கிசேதேக்கிற்கு நாட்களின் துவக்கமும், ஜீவனின் முடிவும் இல்லாதிருந்தது. 635 மெல்கிசேதேக்கு தேவனாயிருந்தார். மெல்கிசேதேக்கு யேகோவா தேவனாயிருந்தார், அதே ஒருவரே அனேக வருடங்களுக்குப் பின் ஆபிரகாமை அவனுடைய கூடாரத்தின் முன்னால் சந்தித்தார். அவருடைய முதுகை ஆபிரகாம் பக்கமாக திரும்பியிருந்தார்; அப்பொழுது அவர், "சாராள் ஏன் நகைத்தாள்?" என்று கேட்டார். அது உண்மை. அங்கே நின்று சோதோமை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் அவரே. ஆபிரகாம் அவரை அடையாளங்கண்டு கொண்டான், ஏனென்றால் அவனுடைய திரையின் உட்புறத்தில் அந்த வாக்குத்தத்தத்தை நங்கூரமானது பற்றிக் கொண்டிருந்தது. அவன் ஏதோ ஒரு உணர்ச்சிவசப்படுதலை உடையவனாயிருந்தான் என்ற காரணத்தினால் அல்ல, ஆனால் தேவன் அவனுக்கு வாக்குப்பண்ணியிருந்தார். அவன் அந்த மகத்தான காந்தத்தண்டை தொடர்பு கொள்ள வந்தபோது, அப்பொழுது அவர் அந்த மாம்சத்தில் இருந்தார் என்பதை அவன் அறிந்துகொண்டான். 636 அங்கே இருந்த அந்த சிறு இடத்திற்கு ஆபிரகாமண்டை நடந்து சென்றார். அவர் ஆபிரகாமினிடத்தில் கூறினார். அவர், "ஆபிரகாம் உலகத்தின் சுதந்தரவாளியாயிருக்கிறபடியால், நான் செய்யப்போகும் இந்தக் காரியங்களை அவனுக்கு மறைப்பேனோ? நான் அதை அப்படிச் செய்யமாட்டேன்" என்றார். ஆகையால், "ஆபிரகாமே, நான் என்னுடைய பாதையில் என்ன செய்வதாக உள்ளேன் என்பதை உனக்குச் சொல்வேன்." நாம் இன்றிரவு, "அங்கே சோதோமில்" நடந்ததையும், அவர்கள் எல்லோரும் செய்யப் போவதாயிருந்தது என்ன என்பதையும் எடுத்துப் பார்ப்போம். அவர் ஆபிரகாமை ஆசீர்வதித்தவுடனே, அவர் மேலே வானத்திற்கு மீண்டும் திரும்பிச் சென்றார். ஒரு மனிதன் தன்னுடைய ஆடையில் தூசி படிந்தவராய், ஒரு மனிதனாக அங்கே நின்றார். அது மாத்திரமல்ல, ஆனால் அவர் ஆபிரகாம் கொன்ற ஒரு கன்றின் மாம்சத்தைப் புசித்து, பசுவின் பாலைக் குடித்து, வெண்ணெய் தடவியிருந்த சில அப்பங்களை (சில வாற்கோதுமை அப்பங்களை) புசித்தார். அது முற்றிலும் உண்மை . அதன் பின்னர் அவர் மீண்டும் ஒரு ஆவிக்குரிய சரீரத்திற்குள்ளாக சென்று விட்டார். 637 அது என்னவாயிருந்தது? அதன் பின்னர் ஏன் அவர் அந்த சரீரத்தில் இருக்க வில்லை ? அவர் உங்களையும் என்னையும் போன்று அப்பொழுது பிறக்காமலிருந்தார். ஆனால் அவர் அந்தக் கொடுக்கைப் பற்றிப் பிடிக்க அவர் மாம்சத்தில் பிறக்க வேண்டியதாயிருந்தது. அது ஒரு சிருஷ்டிக்கப்பட்ட சரீரமாய் இருந்தது. அவர் பூமியிலிருந்து சுண்ணாம்பு மற்றும் சாம்பல் உப்பு போன்றவற்றை எடுத்து, "வ்வூயு" என்று ஊதி அந்த சரீரத்தை உண்டாக்கி, அதற்குள் சென்றார். அது மெல்கிசேதேக்காயிருந்த அதே காரியமாயிருந்தது. அவர் அந்த சரீரத்திற்குள் சென்று, ஆபிரகாமுக்கு முன்னிருந்த திரைக்குக் கீழாக ஒரு சரீரத்தில், அவரால் நடந்து செல்ல முடிந்தது, தம்முடைய சொந்த சிருஷ்டிப்பின் ஒரு திரையினைக் கொண்டு நடந்து செல்ல முடிந்தது; ஒருபோதும் ஒரு ஒரு உயிரணுவினூடாக, ஒரு ஸ்திரீயின் கிருப்பையினூடாக அல்ல, ஒரு ஸ்திரீயின் சிருஷ்டிப்பின் திரையினைக் கொண்டு அல்ல. ஆனால் அவர் இதை சிருஷ்டித்து, அதற்குள் சென்று மெல்கிசேதேக்கின் முறைமையிலிருந்து பேசினார். 638 யார் இந்த மெல்கிசேதேக்கு? இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், (அது எருசலேமாயுள்ளது), உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான். இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு (அந்த மகத்தான அன்பு ஆதியில் இருந்த அந்த மகத்தான ஆவி) நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அருத்தமாம். இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல்... 639 அது யாராயிருந்தது? அவர் ஒரு போதும் பிறக்கவுமில்லை , அவர் ஒரு போதும் மரிக்கவுமில்லை . அது யாராயிருக்கிறது? அது தேவனாயிருந்தது, நிச்சயமாக, அது கர்த்தராகிய இயேசுவின் முன்நிழலாய் இருந்தது, நிச்சயமாகவே அவ்வாறாய் இருந்தது. ஆனால் நீங்கள் ஒரு ஸ்திரீயினூடாக வருகிற முறையின்படியே அவரும் ஒரு ஸ்தீரீயினூடாக வர வேண்டியதாயிருந்தது. உங்களை அவரண்டைக்கு திரும்பக் கொண்டு வரும்படிக்கு, நீங்கள் வருகிற விதமாகவே அவரும் வரவேண்டியதாயிருந்தது. அல்லேலூயா! ஆச்சரியமான கிருபை, அந்த சத்தம் எவ்வளவு இனிமையானது, அது என்னைப் போன்ற ஒரு இழிவான, குருடனான இழிஞனை இரட்சித்தது! நான் ஒரு காலத்தில் காணாமற்போனேன், ஆனால் நான் இப்பொழுதோ அவருடைய கிருபையினால் கண்டுபிடிக்கப்பட்டேன், நான் குருடனாயிருந்தேன், ஆனால் நான் இப்பொழுது காண்கிறேன். 640 அவர் என்ன செய்ய வேண்டியதாயிருந்தது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். கிருபையினால் நான் தேவனைப் போலாகும்படிக்கு அவர் என்னைப் போலானார். அவருடைய நீதியினூடாக நான் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படிக்கு அவர் என்னுடைய பாவங்களை எடுத்துக் கொண்டார். நானாகவே அதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை, என்னுடைய சுபாவமே ஒரு பாவியாயிருந்தது. நான் அதனோடு செய்வதற்கு ஒன்றுமேயில்லாதிருந்தது. நான், "உலகத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுகிறவனாய் உலகத்திற்கு வந்தவனாயிருந்தேன்." எனவே எந்த ஒரு வாய்ப்பும் கூட கிடையவே கிடையாது; எந்த ஒரு வாஞ்சையுங் கூடக் கிடையாது. 641 ஒரு பன்றியினிடத்தில், அது "தவறாயுள்ளது என்றும், அது கழிவினைப் புசிக்கிறது" என்றும் அதினிடம் நீங்கள் சொல்லுவீர்களா? அது உங்களுக்கு எந்த அளவு செவிகொடுக்கும் என்று பாருங்கள். ஒரு காகத்தினிடத்தில், "அது தவறாயுள்ளது என்றும், அது செத்த பிணங்களின் மேல் அமர்ந்து புசிக்கிறது" என்றும் சொல்லுங்கள், அப்பொழுது அது உங்களுக்கு என்ன சொல்லும் என்று பாருங்கள். அதனால் பேச முடிந்தால், "நீ உன்னுடைய சொந்த வேலையைக் கவனி" என்று கூறும். நிச்சயமாக. 642 ஓ, ஆனால் தேவனுடைய கிருபையே இந்த சுபாவத்தை மாற்றி "உம்முடைய அன்பு, கிருபை ஜீவனைப்பார்க்கிலும் எனக்கு மேலானது, ஓ, தேவனே. என் இருதயம் உம்மையே வாஞ்சிக்கும்" என்று வாஞ்சிக்கும்படி, மன்றாடும்படி, தாகங்கொள்ளும்படியான சந்தர்ப்பத்தை எனக்கு அளிக்கிறது. 643 தாவீது, "மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது" என்றான். 644 தேவன் மனிதனுக்கு அந்த தாகத்தை, அவரை ஆராதிக்க, நேசிக்க, அவரைத் தேட அளித்தார். ஆனால் பிசாசின் அழைப்பினால் மனிதன் அதை தாறுமாறாக்குகிறான், எனவே அவன் போய் ஸ்திரீகளையும், இன்பங்களையும், உலகத்தின் காரியங்களையும் இச்சித்து, அவரை நேசிக்க தேவன் உள்ளே வைத்துள்ள அந்த பரிசுத்த சிருஷ்டிப்பைத் திருப்திப்படுத்த முயற்சிக்கிறான். அவன் அதை உலகத்தின் காரியங்களின் மேல் வைக்கிறான். ஆனால் சகோதரனே, அவன் ஒரு முறை மாற்றப்பட்டு, அதாவது புழுக்கள் மற்றும் எல்லாவிதமான அழுக்குகளும் உள்ள தொட்டியானது கிருமிகளில்லாமல் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, பின்னர் அதில் சுத்தமான தேவனுடைய தண்ணீர் நிறைக்கும்போது, பாவம் அதனை ஒருபோதும் தொடவே முடியாது. ஆமென். ஓ, நான் எவ்வளவாய் அவரை நேசிக்கிறேன்! நான் எவ்வளவாய் அவரை போற்றுகிறேன்! என்னுடைய ஜீவன், என்னுடைய சூரிய வெளிச்சம், என்னுடைய எல்லாவற்றிலும், எல்லாமுமாயிருக்கிறார்! மகத்தான சிருஷ்டிகர் என் இரட்சகரானார், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் அவருக்குள் வாசமாயிருக்கிறது. மகிமையை விட்டு ஜீவனுள்ள வரலாறாக என் தேவனும் இரட்சகருமானவர் இறங்கி வந்தார், இயேசுவென்பது அவருடைய நாமம், ஒரு தொழுவத்தில் பிறந்தார், அவர் சொந்தமானவர்க்கு அன்னியரானார், துக்கமடைந்த தேவனாய், கண்ணீரும், வியாகுலமுமடைந்தார். ஓ நான் அவரை எவ்வளவாய் நேசிக்கிறேன்! நான் அவரை எவ்வளவாய் போற்றுகிறேன்! என் மூச்சும், என் சூரிய வெளிச்சமும், என்னுடைய எல்லாவற்றிற்கும் எல்லாமுமாயிருக்கிறார்! 645 ஓ தேவனே! அவரால் எப்படி அதைச் செய்ய முடிந்தது? மனிதன் அதைக் குறித்து எழுத முயற்சித்திருக்கிறான். ஒருவன் கூறினான்; நாம் சமுத்திரத்தை மையினால் நிறைத்து பூமியில் உள்ள ஒவ்வொரு தண்டையும் இறகாக உபயோகித்து, ஆகாயம் முழுவதையும் தோல் காகிதமாக்கி, ஒவ்வொரு மனிதனையும் எழுதும் தொழிலில் அமர்த்தினால் தேவனுடைய அன்பை எழுதுவதென்பது. அந்த மகத்தான பரலோகத்தின் தேவன் எப்படியாய் மாம்சமாகி, என்னுடைய பாவங்களை எடுத்துக் கொண்டார். தேவனுடைய அன்பை எழுதுவதென்பது சமுத்திரத்தை உலரச் செய்துவிடும்; வானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை படர்ந்துள்ள தோல் சுருள் தேவனுடைய அன்பு அனைத்தையும் கொள்ளுமா. 646 ஒரு நிச்சயமான நம்பிக்கையாக, இந்த இரட்சிப்பின் சுதந்தரவாளிகளாக்க, அவர் நம்மை கடைசி நாட்களில் எழுப்பி, நித்திய ஜீவனை அளிப்பேன் என்று தம்மில் தானே ஆணையிட்டார். "ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்ள முடியாது." ஆமென். நாம் ஜெபம் செய்வோமாக. 647 நீங்கள் அவருடைய அன்பைப் இகழ்ந்து புறக்கணித்த குற்றவாளியாயிருக்கிறீர்களா? நீங்கள் இருக்கிற விதமாக உங்களை உருவாகின இந்த மகத்தான் ஒருவரை, அந்த ஸ்தோத்தரிக்கப்பட்டவரை வெறுத்துத் தள்ளிவிட்டிருக்கிறீர்களா? இப்பொழுது இந்தக் காலையில் இங்குள்ள உங்களுக்கு இந்த ஜீவியத்தில் இருக்கையில், உங்களுக்கு ஒரு தருணம் அளிக்கப்படுகிறது. நீங்கள் தொடர்ந்து ஜீவிக்க விரும்புகிறீர்களா? அவ்வாறு ஜீவிக்க ஒரே ஒரு வழிதான் உண்டு, அது கர்த்தராகிய இயேசுவின் மேல் விசுவாசம் வைப்பதாகும். நீங்கள் உங்களுடைய இருதயத்திலிருந்து, அவர் தேவ குமாரனாயிருக்கிறார் என்று விசுவாசித்து, அவரை உங்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டு, உங்களை நீதிமானாக்குவதற்காக தேவன் அவரை உயிரோடெழுப்பினார் என்று விசுவாப்பீர்களேயானால், நீங்கள் அந்த அடிப்படையின் பேரில் அதை ஏற்றுக்கொள்ள விரும்பினால், அது இப்பொழுது உங்களுடையதாயிருக்கிறது. 648 நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா? செய்த தவறுக்காக மனம் வருந்தாத சில ஆத்துமாக்கள், இந்தக் காலையில்.... மனந்திரும்பி, நாம் ஜெபிக்கும்போது, "சகோதரனே, பிரசங்கியே, என்னை ஜெபத்தில் நினைவு கூருங்கள். நான் அதிகமாய்த் தவறிப்போயிருக்கிறேன். நான் சபையில் சேர்ந்துள்ளேன், ஆனால் நீங்கள் பேசிக்கொண்டிருந்ததை நான் ஒருபோதும் பெற்றிருக்கவில்லை என்பதை நான் அறிவேன். சகோதரன் பிரான்ஹாம், நான் அந்த ஆவியினால் ஒருபோதும் பிறந்திருக்கவில்ல. நான் நான் அதைப் பெற்றுக்கொள்ளவேயில்லை, அவ்வளவுதான். இந்தக் காலையில் தேவன் அதை எனக்குத் தரும்படி நீர் எனக்காக ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கூறுங்கள். ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறு யாரேனும் இருக்கிறீர்களா? நீங்கள், "தேவனே, நான் என்னவாயிருக்க வேண்டும் என்று நீர் விரும்புகிறீரோ, அதன்படி என்னை உருவாக்கும். நீர்... விரும்புகிறபடி நான் இருக்க... அதாவது நான் இருக்க வேண்டும் என்று நீர் விரும்புகிறபடியே நான் இருக்க விரும்புகிறேன், நான் உம்முடைய அன்பை வெறுத்து ஒதுக்கியிருக்கிறேன்" என்று கூறுங்கள். மகனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. 649 இப்பொழுது அப்படியே ஒரு நிமிடம். நாம் சமுத்திரத்தை மையினால் நிறைத்து வானத்தை தோல் காகிதமாக உபயோகித்து பூமியில் உள்ள ஒவ்வொரு தண்டையும் இறகாக உபயோகித்து, ஒவ்வொரு மனிதனையும் எழுதும் தொழிலில் அமர்த்தினால், தேவனுடைய அன்பை எழுதுவதென்பது சமுத்திரத்தை உலரச் செய்துவிடும்; வானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை படர்ந்துள்ள தோல் சுருள் தேவனுடைய அன்பு அனைத்தையும் கொள்ளுமா. ஓ, தேவனுடைய அன்பு, எவ்வளவு ஐஸ்வரியமும், தூய்மையுமானது! எவ்வளவு என ஆழம் காண இயலாது, பெலமானது! அது என்றென்றுமாய் நிலைத்திருக்கும், அதுவே பரிசுத்தவான்கள் மற்றும் தூதர்களின் பாடலாகும். 650 அன்புள்ள தேவனே, உண்மையாகவே புலவன் எழுதின இந்த வார்த்தைகள் உம்முடைய மற்ற அநேக விசுவாசிகள் அதை வெளிப்படுத்திக் கூற கண்டறிய முயற்ச்சித்து ஆராயும் வார்த்தைகளைப் போன்றே இருந்தன. வேதத்தில், "பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் கேட்டாராய்ந்து, அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான்" என்று எழுதப்பட்டுள்ளது. ஓ, அது உண்மையாகவே என்னவாய் உள்ளது என்பதை ஜனங்களுக்கு விளக்கிக் கூற முடிந்த வார்த்தைகளையும் நாவையும் உடையவர்களாயிருக்க நாங்கள் எவ்வளவாய் விரும்புகிறோம், ஆனாலும் அதை மானிட உதடுகளில் கண்டறியப்பட முடியவில்லை . பரலோகத்தில் தேவன் எப்படியாய் இழிவான, இழக்கப்பட்டிருந்த, இழிந்து கிடந்த பாவிகளை இரட்சிக்க பூமிக்கு வந்தார் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி முழு நித்தியத்திலும் அது எப்போதும் இதனை வெளிப்படுத்தும். 651 பிதாவே, நான் கூற வேண்டியிருந்த இந்த சில கோர்வையற்ற வார்த்தைகளினூடாக அல்லது இந்தக் காலை இந்தக் கோர்வையற்ற வார்த்தைகளினால், அடைக்கலத்திற்காக ஓடிவந்துள்ள யாரோ ஒருவர் சாமாதானத்தையும், ஒரு மனநிறைவையும், ஒரு உறுதியான ஆறுதலையும் கண்டடைந்திருக்க வேண்டும் என்று நான் உம்மிடத்தில் ஜெபிக்கிறேன். அவர்களுடைய ஆத்துமா, கடைசி நாளில் தேவன் அவர்களை எழுப்புவதாக அவர் ஆணையிட்டுள்ள அந்த வாக்குத்தத்தத்திற்கு நங்கூரமிடப்படுவதாக. இந்தக் கட்டிடத்தில், இங்கே இந்தக் கூடாரத்தில் பல கரங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. தேவனே, அவர்களுக்கு இப்பொழுதே உறுதியான நம்பிக்கையை அளியும். அவர்கள் காலங்களின் கன்மலையண்டை நங்கூரமிடப்படுவார்களாக. சமுத்திரம் எவ்வளவு மோசமாக அலைகளினால் அலைகழித்தாலும், அவர்களுடைய சிறு கப்பல்கள் எவ்வளவுதான் தண்ணீரில் குதித்தாலும் கவலைப்பட வேண்டியதேயில்லை, அவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தில் நங்கூரமிடப்படுவார்களாக. அவர்கள் அங்கேயே தரித்திருந்து, "தேவன் அதைக் கூறினார். அவரால் பொய்யுரைக்க முடியாது" என்று கூறுவார்களாக. 652 "என் வசனத்தைக் கேட்டு,'' நான் இந்தக் காலையில் பிரசங்கிக்க முயன்றதை, "என்னை அனுப்பினவரை, யோகோவாவை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் நியாயத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்." 653 ஓ நித்தியமானவரே, இன்றைக்கு அவர்களை ஆசீர்வதியும். இங்கே இரத்தத்தின் கீழ் இல்லாத ஒவ்வொரு நபரும், அவர்களுடைய ஆத்துமாக்கள் ஒருபோதும் மனமாற்றமடையாமலிருந்தால், அது கர்த்தாவே இப்பொழுதே சம்பவிப்பதாக. நீர் இரகசியமாய் கிரியை செய்கிறீர். அவர்கள் எல்லோரும் உம்முடையவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்டுள்ளனர். நீர் அவர்களுக்கு நித்திய ஜீவனை அருள் வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். என்றோ ஒரு நாள் நாங்கள் ஒருவர் பின் ஒருவராக அந்தப் பள்ளத்தாக்கினூடாக கடந்து சென்று, அக்கரையில் நாங்கள் அங்கே ஒருவரையொருவர் சந்திக்கும்போது, அப்பொழுது அவர்கள் ஒருபோதும் "பிரியா விடை வாழ்த்தினைக் கூறவே மாட்டார்கள். என்றோ ஒரு நாள் நாம் முடிவின் நேரத்தில்ஆற்றண்டை வரும்போது, துயரத்தின் கடைசி நினைவுகள் போய்விட்டிருக்கும்போது; அங்கே நமக்கு அந்த வழியைக் காண்பிக்க யாரோ ஒருவர் காத்துக்கொண்டிருப்பார், எனவே நான் யோர்தானை தனியே கடக்க வேண்டியதாயிராது. எனக்கு அந்த வழியைக் காண்பிக்க அங்கே ஒருவர் காத்துக்கொண்டிருப்பார், எனவே நான் யோர்தானை. தனியே கடக்க வேண்டியதாயிராது. 654 அந்த நம்பிக்கையைப் பெற்றுள்ள யாவரும், நீங்கள் உங்களுடைய தலையை உயர்த்தும்போது, உங்களுடைய கரத்தையும் உயர்த்துங்கள். நான்... கடக்க வேண்டியதாயிராது. இப்பொழுது அவரை அப்படியே ஆராதிப்போம். செய்தியானது முடிவுற்றுவிட்டது. நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கவில்லையா? தேவன். ஆணையிட்டார். தேவன் உங்களை அங்கே சந்திப்பதாக ஆணையிட்டார். என்னுடைய எல்லா பாவங்களையும் நிவிர்த்தி செய்ய இயேசு மரித்தார்; நான் இருளில்... நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? கொடுக்கு ஒழிந்துபோயிற்று. அவர் எனக்காக காத்துக்கொண்டிருப்பார், எனவே நான் யோர்தானை தனியே கடக்க வேண்டியதாயிராது. நான் கைவிடப்பட்ட, களைத்த... காலங்கள்... இப்பொழுது அவரை அப்படியே ஆராதியுங்கள். என்னுடைய நண்பர்கள் எல்லோரும் போய்விட்டது போன்று தென்படுகிறது; நீங்கள் எப்பொழுதாவது அந்த நிலையை அடைந்துள்ளீர்களா? ஆனால் என்னை மகிழ்விக்கிற ஒரு சிந்தனை உண்டு. அந்த வாக்குத்தத்தம் என்னவாயிருந்தது? என்னுடைய இருதயத்தை மகிழ்ச்சியடையச் செய்கிறது,நான் யோர்தானை... கடக்க வேண்டியதாயிராது... 655 இப்பொழுது, வாக்குத்தத்தின் பிள்ளைகளே, அதைச் செய்வதற்காக அவரை அப்படியே ஆராதியுங்கள். நான் யோர்தனை தனியே கடக்க வேண்டியதாயிராது, இயேசு என் பாவங்கள் எல்லாவற்றையும் நிவிர்த்தி செய்ய மரித்தார்; இப்பொழுது என்ன சம்பவிக்கிறது? நான் இருளைக் காணும்போது, அவர் எனக்காக காத்துக் கொண்டிருப்பார், எனவே நான் யோர்தானை தனியே கடக்க வேண்டியதாயிராது. "நான் ஆற்றண்டை வரும்போது... " நீங்கள் ஒவ்வொருவரும் வந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு முன்பாக அங்கே ஒரு பெரிய, கருத்த நிழல் உள்ளது. அது ஒரு பெரிய வாசலாய் உள்ளது. இந்நாட்களில் ஒன்றில் நீங்கள் அங்கே போகப்போகிறீர்கள், ஒரு கால் இந்நாள் முடிவுறும் முன்னே போகலாம், இக்காலை சபை முடிவுறும் முன்னும் போகலாம். நீங்கள் அங்கே போய்க்கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் இருதயம் துடிக்கும்போது, நீங்கள் ஒரு அடி முன்னால் இருக்கிறீர்கள். ஆனால் நான் இருளைக் காண்கையில், அவர் அங்கே எனக்காக காத்துக் கொண்டிருப்பார், அவர் காத்திருப்பதாகக் கூறினார். அவர் காத்திருப்பதாக ஆணையிட்டார். அப்பொழுது நான் யோர்தானை தனியே கடக்க வேண்டியதாயிராது. 656 ஓ ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தாவே, இந்தக் காலையில் எங்களுடைய இருதயங்கள் பொங்கி வழிந்து கொண்டிருக்கின்றன. 657 உங்களுடைய நாடித்துடிப்பு நின்று போய், மருத்துவ தாதி உங்களுடைய தலையணையை அழுத்துவதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய கரங்களை உங்களால் அப்பொழுது ஒருபோதும் அசைக்கவே முடியாது. உங்களுடைய கரங்கள் குளிர்ந்து விரைத்துப் போய்விடும். உங்களுடைய பிள்ளைகள், உங்களுடைய தாய், உங்களுடைய அன்பார்ந்தவர்கள் கூக்குரலிட்டு கதறிக்கொண்டிருப்பர். அப்பொழுது அக்கரையில் உள்ள பெரிய கதவுகள் ஊஞ்சலாடித் திறக்கும். அவர் காத்துக்கொண்டிருப்பார். 658 தாவீது, "நான் பாதாளத்தில் படுக்கைப் போட்டாலும், அவர் அங்கேயும் இருப்பார்,'' என்றான். எனவே நான் அதைத் தனியேக் கடக்க வேண்டியதாயிராது. ஆற்றின் தூறல்கள் நம்முடைய முகத்தில் தெறிக்கத் துவங்கும்போது, தேவன் ஜீவப்படகினைக் கொண்டு அதைக் கடக்க நம்மை வழி நடத்திச் செல்வார். அவர் அதைச் செய்வதாக வாக்குப்பண்ணினார். தீர்க்கதரிசி தாவீது, "ஆம், நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்" என்றான். 659 கர்த்தாவே, நாங்கள் அந்த வாக்குத்தத்தத்தின் சுதந்தரவாளிகளாக சேர்க்கப்பட்டபடியினால், நாங்கள் இன்றைக்கு மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறோம். இன்றைக்கு நாங்கள் எங்களுக்குள் நித்திய ஜீவனைப் பெற்றுள்ளோம், ஏனென்றால் நாங்கள் கர்த்தராகிய இயேசுவை நேசிக்கிறோம், நாங்கள் அவரை விசுவாசித்து, அவருடைய வார்த்தையையும், அவருடைய உபதேசத்தையும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அவர் எங்களுடைய விசுவாசத்திற்கு ஒரு முத்திரையாக, பரிசுத்த ஆவியை, பரிசுத்த ஆவியின் முத்திரையை எங்களுக்கு அளித்துள்ளார். எங்களுடைய விசுவாசம் எங்களுக்குள் நங்கூரமிடப்பட்டிருக்கிறது. அநேக சமயங்களில் நாங்கள் கருத்த நிழல்களினூடாக நடந்து கொண்டிருந்தாலும், அநேக சமயங்களில் நாங்கள் பாதை நெடுகிலும் தடுமாறிக்கொண்டிருந்தாலும், எங்களுடைய நங்கூரம் இன்னமும் பற்றிப் பிடித்திருக்கிறது. அதில் ஏதோ ஒன்று உள்ளது, எனவே அது அங்கே தொலைவிலிருந்து, "முன்னே போ" என்று கூறி தொடர்ந்து வழி நடத்திச் செல்லும்படியாக உள்ளது போன்று தென்படுகிறபடியால், நாங்கள் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். 660 தேவனே எங்களை ஆசீர்வதியும். நீரே எங்களுக்குத் தேவை. நீர் எங்களுக்காக வரும் நேரம் வரையில் எங்களை என்றென்றும் உறுதியாயும், உண்மையாயுமிருக்கும்படிக்குக் காத்துக்கொள்ளும், அப்பொழுது நாங்கள் உம்மை இடைவிடாமல் சதாகாலமும் உம்மைத் துதிப்போம். அந்த நாளிலே நாங்கள் பூமியின் மேல் நிற்கும் போது.. இன்னும் அவருடைய ஆசீர்வதிக்கப்பட்டப் பாதமானது பூமியை ஒருபோதும் தொட்டதில்லை. அவர் அங்கே ஆகாயத்தில் நிற்க, பரிசுத்தவான்கள் எல்லா காலங்களிலிருந்தும், ஒவ்வொரு ஜாமத்தினூடாகவும், அதாவது முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம், ஏழாவது ஜாமத்தினூடாக மீட்கப்பட்டவர்கள் அவருடைய நீதியில் அங்கே யாவரும் வஸ்திரந்தரிக்கப்பட்டவர்களாய் நின்று, நாம் இராஜாதி இராஜாவும், கர்த்தாதி கர்த்தருமாகிய அவருக்கு முடிசூட்டி, அந்த மீட்பின் கதைகளைப் பாடுவோம். எங்களை நேசித்த, எங்களுக்காக தம்மையேத் தந்த அவரை நாங்கள் நோக்கிப் பார்க்கும்போது, எங்களுடைய அற்பமான இருதயங்கள் நடுங்கும். நாங்கள் விரும்பத்தகாதவர்களாய், பாவிகளாயிருக்கையில், நாங்கள் இரட்சிக்கப்படும்படிக்கு கிறிஸ்து மரித்தார். பிதாவே கிறிஸ்துவினுடைய நாமத்தில் நாங்கள் அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆமென். 661 நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஓ, அவர் எவ்வளவு நிஜமானவராயிருக்கிறார். நீங்கள் எப்படியாவது உங்களுடைய கரங்களை மேலே அவரைச் சுற்றிப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது போன்று நீங்கள் உணரவில்லையா? நீங்கள் அப்படியே ஊர்ந்து சென்று அவருடைய பாதத்தை தொட விரும்புவதை நீங்கள் அறியவில்லையா? 662 முன்பெல்லாம் சில ஜனங்கள் அரிசோனாவில் உள்ள பீனிக்ஸில் நடைபெறும் என்னுடைய கூட்டத்திற்கு வந்து, "நான் அவரோடு அக்கரையில் பேச விரும்புகிறேன். நான், கர்த்தாவே, என்னுடைய பாதை மிகவும் மங்கலாய் தோன்றினபோது நீர் என்னை நேசித்தீர் என்பதைக் கூற விரும்புகிறேன்" என்று கூறுவதை நீங்கள் அறிவீர்கள். நாம் அக்கரையை கடப்பதற்கு முன்பு நான் அவரோடு அதைக் குறித்துப் பேச விரும்புகிறேன். நான் நான் அவரைக் காண விரும்புகிறேன், நான் நான் நான் அவரைக் காண விரும்புகிறேன். அப்பொழுது நான் எப்படி உணருவேன் என்பதையும், நான் அவர் அங்கே நிற்பதைக் காணும்போது, எப்படியாய் என்னுடைய அற்பமான இருதயம் நடுங்கும் என்பதையும் நினைத்துப் பார்க்கிறேன். 663 நான், "'வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்' என்று கூறின் அந்த சத்தத்தைக் கேட்டிருக்க முடிந்திருந்தால் நலமாயிருந்திருக்குமே" என்று எண்ணி அவ்வப்போது வியப்புற்றிருக்கிறேன். 664 அவர் அதை அப்பொழுது பேசினது போன்று பேசுகிறதை உண்மையில் அநேகமாக ஒருபோதும் கேட்காமலிருக்கலாம், ஆனால் நான், "இது கடைசி நாளாய் உள்ளது. நல்லது, உத்தமும், உண்மையுமுள்ள ஊழியக்காரனே, உனக்காக ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற கர்த்தருடைய சந்தோஷத்திற்குள் இப்பொழுது பிரவேசி" என்று அவர் கூறுவதையேக் கேட்க விரும்புகிறேன். எவ்வளவு காலம் முதற்கொண்டு ? 665 "நீங்கள் இரட்சிக்கப்பட்டது முதற்கொண்டா?" இல்லை சகோதரனே, 666 "உலகத்தோற்றமுதல், நான் உன்னைக் கண்டு, உன்னை முன்னறிந்து, நித்திய ஜீவனுக்கென்று உன்னை நியமித்திருந்தேன்,'' நீ அப்பொழுதிலிருந்தே ஆசீர்வதிக்கப்பட்டிருந்தாய். "அவர் முன்னறிந்திருக்கிற எல்லோரையும், அவர் அழைத்திருக்கிறார். அது சரிதானே? [சபையோர், "ஆமென்" என்கின்றனர். ஆசி.] "அவர் அழைத்திருக்கிற யாவரையும், அவர் நீதிமானாக்கியிருக்கிறார். எவர்களை நீதிமான்களாக்கியிருந்தாரோ, அவர்களை ஏற்கெனவே மகிமைப்படுத்தியுமிருக்கிறார். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. அவர் நம்மை முன்னறிந்து, நம்மை அழைத்து, நம்மை நீதிமான்களாக்கி, உலகத்தின் முடிவிலே நம்முடைய பலனைப் பெற்றுக்கொள்ளும்படி நாம் அவரோடு ஏற்கனவே மகிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். நீங்கள் மகிழ்ச்சியாயில்லையா? ["ஆமென்."] நிச்சயமாக. அது உங்களை அவரை நேசிக்கும்படிச் செய்யும். நீங்கள் உங்களுக்கே உதவ முடியாமலிருந்தபோது, அவர் இங்கு வந்து, உங்களுக்காக அதைச் செய்தார். 667 சகோதரி கெர்டி அவர்களே, 'பிணைக்கும் கட்டு ஆசீர்வதிக்கப்படுவதாக' என்ற அந்தப் பாடலை வாசியுங்கள். நாம் இங்கே இப்பொழுது இந்த சிறு ஐக்கியத்தின் ஆராதனையில் இருந்து, "நம்முடைய இருதயங்களை கிறிஸ்தவ அன்பில்" என்ற அந்தப் பாடலைப் பாடிய பிறகு, நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப்போகிறோம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இந்தக் காலையில் கிறிஸ்துவண்டை உங்களுடைய கரங்களை உயர்த்தினவர்களாகிய நீங்கள் ஆராதிக்கும்படியான ஒரு இடத்தைக் கண்டறிந்து அவரை சேவியுங்கள். 668 இப்பொழுது, மெத்தோடிஸ்டுகள், சர்ச் ஆஃப் காட், அசெம்பளீஸ் ஆப் காட், பிரஸ்பிடேரியன்கள், லூத்தரன்கள், கத்தோலிக்கர்களாகிய நீங்கள் யாவருமாக சேர்ந்து ஒரே சபையாக, நாம் இப்பொழுது அவரை ஆராதிப்போமாக. இப்பொழுது யாவரும் ஒன்று சேர்ந்து பாடுவோமாக. நம்முடைய இருதயங்களை கிறிஸ்தவ அன்பினால் பிணைக்கும் கட்டு ஆசீர்வதிக்கப்படுவதாக; ஒரே சிந்தையுள்ளவர்களின் ஐக்கியம் மேற்கூறியது போன்றிருக்கும். நம்முடைய பிதாவினுடைய சிங்காசனத்திற்கு முன்பாக நாம் நம்முடைய ஊக்கமான ஜெபத்தை ஊற்றுகிறோம்; நம்முடைய பயங்கள், நம்முடைய நம்பிக்கை, நம்முடைய நோக்கங்கள், நம்முடைய ஆறுதல் மற்றும் நம்முடைய கவலை அனைத்தும் ஒன்றே நாம் பிரிந்து செல்லும்போது, அது உள்ளில் நமக்கு வேதனை அளிக்கிறது; ஆனால் நாம்... இன்னும் இணைக்கப்பட்டு... மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், மற்றுமுள்ள யாவரும் எத்தனை பேர் உள்ளீர்கள்? மறுபடியும் சந்திப்போம் என நம்புகிறோம் 669 அது உங்களுக்கு நன்மையைச் செய்கிறதல்லவா? நாம் அதை மீண்டும் பாடுகையில், நாம் சுற்றிலும் திரும்பி, இப்பொழுது ஒவ்வொருவரும் மற்றவருடைய கரத்தைக் குலுக்குவோம். முன்னே ... உங்களுக்கு பின்னால், உங்களுக்கு முன்னால், எந்தப் பக்கத்தில் இருந்தாலும் கரங்களைக் குலுக்குங்கள். சிங்காசனத்திற்கு, நாம் நம்முடைய ஊக்கமான ஜெபத்தை ஊற்றுகிறோம்; நம்முடைய ஆறுதல் மற்றும் நம்முடைய கவலை. இப்பொழுது நாம் பிரிந்து செல்லும்போது, நாம் ஒருவரையொருவர் நேசிப்போம். அது... அளிக்கிறது... ஆராதனையை தொடர்ந்து நடத்தினால் நலமாயிருக்குமா? பார்த்தீர்களா? அந்த விதமாகத்தான் நாம் சிந்திக்கிறோம். உள்ளில் வேதனை அளிக்கிறது; ஆனால் நாம் இருதயத்தில் இன்னும் ஒன்றாக இணைக்கப்பட்டு, மறுபடியும் சந்திப்போமென நம்புகிறோம். நாம் இங்கே இனி ஒருபோதும் சந்திக்கவில்லையென்றாலும், அந்த மகத்தான நாளிலே நாம் சந்திப்போம். 670 இப்பொழுது பிதாவே, எங்களுடைய ஆராதனையை இந்தக் காலையில் ஏற்றுக்கொள்ளும். வார்த்தையை எடுத்து அதை விசுவாசிகளினுடைய இருதயங்களுக்குள்ளாக நடும். அவர்கள் இன்றைக்கு மேலே, நாளைக்கு கீழே என்று கிட்டத்தட்ட அலைகழிக்கப்படாமலிருப்பார்களாக. ஆனால் இந்த வார்த்தைகள் ஒவ்வொரு விசுவாசியினுடைய இருதயத்திலும் அவர்களுடைய இளைப்பாறும் ஸ்தலத்தைக் கண்டறிவதாக. அதாவது, "தேவன் ஆணையினாலே உறுதி செய்துள்ளார். இரண்டு மாறாத விசேஷங்கள் உள்ளன. அது மாறாத தேவன் என்பதும், அவரால் பொய்யுரைப்பது கூடாத காரியம் என்பதுமாயுள்ளது. அது இந்த இரட்சிப்பின் சுதந்தரவாளிகள் இந்த நிறைந்த நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளும்படி அது நிலையும், உறுதியும், ஆத்துமாவில் நங்கூரமாயுமிருக்கிறது" என்று இதை அறிந்துள்ளோம். எனவே "தேவன் அதை ஒரு ஆணை உறுதியினாலே எங்களுக்கு வாக்குப்பண்ணியிருக்கிறார். ஒன்று, அவரால் பொய்யுரைக்க முடியாது; மற்றொன்று, அவர் எங்களை கடைசி நாளில் எழுப்பி, எங்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பார் என்பதை அதற்கு மேலாக ஆணையினாலே உறுதிபடுத்தினார்" என்பதை அறிந்துள்ளோம். அதாவது, "நாங்கள் அழைக்கப்பட்டப் பிறகு, அவர் எங்களை உலகத்தோற்றத்திற்கு முன்னே அறிந்திருந்து, இயேசு கிறிஸ்துவினூடாக சுவிகாரப்புத்திரராகும்படி எங்களை முன்குறித்தார் என்று அவர் கூறினார். அவர் எங்களை முன்னறிந்திருந்தார். அவர் எங்களை அழைத்தார். அவர் எங்களை அழைத்தபோது, அவர் எங்களை நீதிமான்களாக்கினார்" என்பதை அறிந்துள்ளோம். நாங்களே எங்களை நீதிமான்களாக்கிக் கொள்ள முடியாது, ஆகையால் அவர் தம்முடைய சொந்த குமாரனின் மரணத்தின் மூலமாக எங்களை நீதிமான்களாக்கினார். "எவர்களை நீதிமான்களாக்கினாரோ, அவர்களை மகிமைபடுத்தியுமிருக்கிறார்.'' வார்த்தையானது ஏற்கனவே உரைக்கப்பட்டாயிற்று. நாங்கள் எங்களுடைய பாதையிலிருந்து, எங்களுடைய வழியிலிருந்து மகிமைக்கு நெடுக களிகூர்ந்து கொண்டே சென்று கொண்டிருக்கிறோம். 671 ஜனங்களுக்கு விசுவாசத்தைத் தாரும், சிறு தவறான பழக்கங்கள், மற்றும் ஜனங்களண்டை தொங்கிக்கொண்டிருக்கிற காரியங்களை, இந்தக் காலை நிலையானதும், உறுதியானதுமான ஆத்துமா நங்கூரமாயிருக்கிற இந்த தேவனுடைய வார்த்தையினால் அவைகளை அவர்கள் உதறித்தள்ளுவார்களாக. அவர்கள் தங்களுடைய தவறான பழக்கங்களை, தங்களுடைய சிறு கோபங்களை உதறித்தள்ளுவார்களாக. இருந்து வருகின்றதான அந்தக் காரியங்கள்... நாம் இன்னும், ஒரு சில நாட்களில் பார்க்கவுள்ள செய்தியின் பாகத்தில் கூறியுள்ளது போல, "பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். அவர் எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிறார். அவர் சோதிக்கப்பட அனுமதிக்கப்பட்டார், ஆனால் அவர் சோதனைக்கு செவிகொடுக்கவில்லை. நாமும் பாவத்திற்கு சோதிக்கப்படுகிறோம், ஆனால் ஒரு போதும் அதற்கு செவிகொடுப்பதில்லை. ஏனென்றால் நமக்குள்ளிருக்கிற அந்த ஜீவன் நம்முடைய நித்திய பயண இலக்கின் நங்கூரமாயுள்ளது, நாம் அதை நம்முடைய இருதயத்தில் பயத்தோடு பற்றிப்பிடித்துள்ளோம். 672 இப்பொழுது, சாத்தான் துன்பங்களினால் தொந்தரவு செய்துள்ள அநேகர் இருக்கிறார்கள். பிதாவே நாங்கள் அவர்களுக்காக ஜெபிக்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம். அவர்கள் இன்றைக்கு தேவனுடைய வார்த்தையின் கீழாக கடந்து செல்லும்போது.. அந்த விலையேறப் பெற்ற வார்த்தை பிரசங்கிக்கப்பட்டுள்ளது, வேதமும் சாட்சி கொடுக்கிறது, தேவனுடைய தூதர்களும் அருகே நின்று கொண்டிருக்கிறார்கள், எல்லாவற்றிற்கு மேலாக வார்த்தைக்கு இங்கே சாட்சி கொடுக்க மகத்தான பரிசுத்த ஆவியானவர் நின்று கொண்டிருக்கிறார். இப்பொழுது, பிதாவே, அவர்கள் இந்தக் காலையில் இந்த வார்த்தையின் வாக்குத்தத்தத்தின் கீழ் கடந்து செல்லும்போது, அவர்கள் இங்கிருந்து சுகமடைந்து செல்வார்களாக, அவர்கள் தங்களுடைய ஊனத்திற்காக பயன்படுத்தும் இறுக்கிகளைக் கழற்றிவிட்டு, சக்கர நாற்காலிகளை விட்டு எழுந்து, அவர்கள் படுத்துள்ள கட்டில்களைவிட்டு எழுந்து சுகமடைவார்களாக. கர்த்தாவே, அதை அருளும். அவர்கள் வரும்படி அனுமதிக்கப்பட்டுள்ள அடுத்த ஆராதனைக்குத் திரும்பி வரும்போது அல்லது அவர்களுடைய சொந்த சபைகளுக்குச் செல்லும்போது, கிறிஸ்து என்ன மகத்தான காரியங்களைச் செய்துள்ளார் என்பதை காண்பித்து, களிகூர்வார்களாக. நாங்கள் இந்த ஊழியத்தை உம்முடைய மகிமைக்காக செய்கிறோம், இயேசுவின் நாமத்தில் ஆமென். 673 இந்தக் காலையில் நாம் 7-ம் அதிகாரத்தைப் பார்க்க உள்ளோம் என்று நான் வாக்களித்ததற்காக நான் மன்னிப்பு கோர வேண்டியதாயுள்ளது, ஆனால் நான் அந்த அதிகாரத்தை எடுத்துப் பேசவில்லை. நாம் இங்கே இந்த ஜெப வரிசைக்காக சற்று நேரம் அனுமதிக்க வேண்டும். இப்பொழுது இன்றிரவு கர்த்தருக்குச் சித்தமானால், நாம் 7-வது அதிகாரத்தை எடுத்து, இந்த மெல்கிசேதேக்கு யாராயிருந்தார் என்பதை கண்டறியலாம். அதை அறிந்து கொள்ள எத்தனைபேர் விரும்புகிறீர்கள்? ஓ, சரியாக அவர் யாராயிருக்கிறார் என்பதைக் கண்டறியும்படியாய், நாம் நேராக அவரண்டைச் செல்லப் போகிறோம். அவர் யாராயிருக்கிறார் என்பதை வேதவாக்கியம் சொல்லுகிறது. புரிகிறதா? 674 ஸ்கோஃபீல்டு என்பவர், அது "ஒரு ஆசாரியத்துவமாய்" இருந்தது என்று கூறினார். துவக்கமும் முடிவுமுமில்லாமல் எப்படி அது ஒரு ஆசாரியத்துவமாய் இருக்க முடியும்? நீங்கள் பாருங்கள், அது ஒரு ஆசாரியத்துவமாயிருக்கவில்லை . அது ஒரு மனிதனாய், மெல்கிசேதேக்கு (ஒரு பெயர்), ஒரு நபராயிருந்தது. 675 இதை அவமதிப்பது போன்று கூறவில்லை , ஆனால் கிறிஸ்தவ விஞ்ஞானம் பரிசுத்த ஆவி, "ஒரு சிந்தனை" என்று கூறுகிறது. வேதம், "அவரே, பரிசுத்த ஆவி" என்று கூறியுள்ளது. அவர் என்பது ஒரு தனிப்பட்ட பிரதி பெயராயுள்ளது. அது ஒரு நபராயுள்ளது; ஒரு சிந்தனையாயல்ல. அது ஒரு நபராய் உள்ளது. முற்றிலுமாக. 676 மெல்கிசேதேக்கு ஒரு மனிதனாயிருக்கிறார், அவர் நாட்களின் துவக்கமும், வருடங்களின் முடிவுமில்லாதவராயிருக்கிற ஒரு மனிதன். அவருக்கு தகப்பனும், தாயும், வம்சவரலாறும் இல்லாதிருந்தது. கர்த்தருக்குச் சித்தமானால் இன்றிரவு வார்த்தையின் மூலம் அவர் யாராயிருக்கிறார் என்பதை நாம் கண்டறிவோம். நீங்கள் அதை விரும்புகிறீர்களா? (சபையோர், "ஆமென்" என்கின்றனர். ஆசி.) ஓ! "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது." ஓ! 677 இப்பொழுது, நீங்களோ, "சகோதரன் பிரான்ஹாம் நான் அதைப் புரிந்து கொள்ளுகிறதேயில்லை" என்று கூறலாம். நானும் அதை புரிந்து கொள்ளுகிறதில்லை. 678 ஆனால் ஒரு சமயம் நான் கென்டக்கியில் பிரசங்கித்துக்கொண்டிருந்தேன். ஒரு கால் புதியதாக வருகின்ற சிலருக்கும், கத்தோலிக்கருக்கும் மற்றும் பல்வேறுபட்டவர்களுக்கும், இவை எவ்வளவு ஆழமான காரியங்கள் என்றும், வேதவாக்கியத்தின் உயரிய காரியங்கள் புரிந்துகொள்ளமுடியாமலிருக்கலாம். நான் அங்கே தெய்வீக சுகமளித்தலின் பேரில் பிரசங்கித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது வெறுங்காலோடு இருந்த ஒரு சிறு பெண் கொண்டு வரப்பட்டாள். அவள் பதினைந்து வயதுகூட நிரம்பாதவளாயிருந்தாள், அவள் ஒரு குழந்தையை உடையவளாயிருந்தாள், அந்தக் குழந்தைக்கு முடக்குவாதம் உண்டாயிருந்தது. அப்பொழுது நான், "சகோதரியே, உங்களுடைய குழந்தையோடு உள்ள காரியம் என்ன?" என்று கேட்டேன். 679 அவர்கள், "அதற்கு இழுப்பு நோய் உள்ளது" என்று கூறினர். அவள் அந்த முடக்குவாதத்தை என்னவென்று கூற வேண்டும் என்பதை அறியாதிருந்தாள். அவள் அதை என்னவென்று அழைப்பது என்பதை அறியாதிருந்தாள். 680 அந்த சிறு பெண் தன்னுடைய வாழ்நாளில் ஒரு ஜோடு காலணிகளைக் கூட ஒரு போதும் அணிந்ததேயில்லை. யாரோ ஒரு மனிதனுடைய ஆசைக்குரியவள், நீண்ட கூந்தலை உடையவளாயிருந்தாள். அப்பொழுது நான், "நீ விசுவாசிக்கிறாயா?" என்று கேட்டேன். 681 அந்த் சிறு வெண்மை கலந்த சாம்பல் நிறக் கண்கள் என்னை உற்று நோக்கின. அப்பொழுது அவள், "ஆம் ஐயா. நான் நிச்சயமாக விசுவாசிக்கிறேன்." என்றாள். 682 அப்பொழுது நான் அந்தச் சிறு குழந்தையை தூக்கிக் கொண்டேன். நான் அதற்காக ஜெபித்துக்கொண்டிருக்கையில், அந்த இழுப்பு நின்றுவிட்டது. ஊ- ஊ. அது நின்றே போய்விட்டது, அந்த இழுப்பு போய்விட்டது. 683 அதற்கு அடுத்த நாள் நான் அங்கேயிருந்த மலையின் பக்கத்தில் அணில் வேட்டையாடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது யாரோ ஒரு மனிதன் உட்கார்ந்து அங்கே பேசிக்கொண்டிருந்ததையும், ரம்பத்தால் அறுக்கிற சத்தத்தையும் கேட்டேன். எனவே நான் அங்கு மெல்ல நழுவிச் சென்றேன். அப்பொழுது நான் அணில் வேட்டையாடிக்கொண்டிருந்தேன். அவர்கள் அங்கு அமர்ந்து புகையிலையை மென்று துப்பிக்கொண்டே என்னைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். இலைகளோ அந்த விதமாக பறந்து கொண்டிருந்தன. அவர்கள் அதற்கு முந்தின நாள் இரவன்று நடைபெற்ற கூட்டத்தைக் குறித்தே பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர், "நான் அந்தக் குழந்தையைக் கண்டேன். நான் இந்தக் காலையும் அங்கு சென்று வந்தேன். அந்தக் குழந்தைக்கு இன்னமும் இந்தக் காலையில் கூட இழுப்பு வரவேயில்லை" என்றார். பார்த்தீர்களா? எனவே, "அது உண்மையானதாயிருந்தது" என்றார். அவரோ மென்ற புகையிலையைத் துப்பிக்கொண்டிருந்தார். 684 அவர்கள் துப்பாக்கிகளை மரத்திற்கு எதிரே சாய்த்து வைத்திருந்தனர். ஆகையால் நான் என்னை அறிமுகம் செய்து கொள்வது நல்லது என்று எண்ணிக்கொண்டேன். அங்கிருந்த அவர்களுக்கு இனப் பகைகளும் கூட இருந்து வந்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகையால் நான் அங்கு நடந்து சென்றேன். அப்பொழுது நான் "காலை வணக்கம், சகோதரர்களே" என்றேன். 685 அந்த மிகப் பெரிய உருவங்கொண்ட, புகையிலை வாயில் மென்று இந்த விதமாக வாயின் மறுபக்கத்தில் அடக்கி வைத்திருந்த அந்த விதமான பெரிய உருவமும், நீண்ட கழுத்தினையுமுடைய அவர்தான் பேசிக்கொண்டிருந்தது போன்று தென்பட்டது. அவர் ஒரு மிகப் பெரிய பழைய தொப்பியை தன்னுடைய முகத்தை மறைக்கும்படி இழுத்துவிட்டிருந்தார். அப்பொழுது அவர் சுற்றும் முற்றும் திரும்பி என்னைப் பார்த்தார். பின்னர் அவர் தொப்பியைக் கழற்றிவிட்டு... (சகோதரன் பிரான்ஹாம் விழுங்குகிறார் ஆசி.) அந்த மென்றப் புகையிலையை விழுங்கிவிட்டு, "காலை வணக்கம், போதகரே" என்றார். பார்த்தீர்களா? ஆம் ஐயா. மரியாதை. அது சரியே. அவர் எப்படித்தான் அவ்விதம் விழுங்கி உயிரோடு இருந்து வந்தாரோ எனக்குத் தெரியாது, ஆனால் அவர் உயிரோடுதான் இருந்தார். 686 ஆகையால் அடுத்த நாள் இரவு, திரும்பி வந்த போது, என்னோடு சற்று வாதிட வேண்டுமென்றிருந்த ஒரு மனிதன் அங்கிருந்தார். அவர் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசங்கொண்டிராத ஒரு சபைக்கு சென்று கொண்டிருந்தார். எனவே இதுவோ கென்டக்கியில் உள்ள ஒயிட் ஹில் என்ற இடத்தில் இருந்த ஒரு மெத்தோடிஸ்டு சபையாயிருந்தது. ஆகையால் அவர் அவர் சென்று... அவர் வெளியே நின்று கொண்டிருந்தார். அவர் தன்னுடைய கையில் ஒரு கண்ணாடிக்கூட்டு விளக்கை வைத்திருந்தார். அப்பொழுது அவர், "பிரசங்கியாரே, நான் ஒரு காரியத்தைக் கூற விரும்புகிறேன். என்னால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனென்றால் என்னால் அதைக் காண முடியவில்லை" என்றார். 687 அதற்கு நான், "உங்களால் அதைக் காணமுடியவில்லையா?" என்று கேட்டேன். 688 அப்பொழுது அவர், "காணமுடியவில்லையே'' என்றார். மேலும் அவர், "நானே ஒரு சுகவீனமான மனிதனாயிருக்கிறேன். ஆனால்" என்று கூறி, "என்னால் அதைக் காணமுடியவேயில்லை " என்று கூறினார். அதற்கு நான், "நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?" என்று கேட்டேன், அப்பொழுது அவர், "அங்கே பின்பக்கமாக துரத்தில் பிக் ரெனாக்ஸ் என்ற இடத்தில் தான்" என்றார். அதற்கு நான், "பரவாயில்லை , நீங்கள் வீட்டிற்கு எப்படிப் போகப் போகிறீர்கள்?" என்று கேட்டேன். அப்பொழுது அவர், "நான் நடந்து வீட்டிற்கு செல்லப் போகிறேன்" என்றார். அதற்கு நான், "உங்களால் உங்களுடைய வீட்டைக் காண முடிகிறதா?" என்று கேட்டேன். அப்பொழுது அவர், "இல்லை ஐயா" என்றார். அதற்கு நான், "இன்றிரவு பயங்கரமான இருளும், மேக மூட்டமுமாய் உள்ளதே" என்றேன். அப்பொழுது அவர் "ஆம்" என்றார். அப்பொழுது நான், "நீங்கள் எப்படி வீட்டிற்குப் போகப் போகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர், "இந்த கண்ணாடி கூட்டு விளக்கின் மூலமாகவே" என்றார். அப்பொழுது நான், "இந்தக் காண்ணாடிக் கூட்டு விளக்கு வீட்டிற்கு செல்லும் முழு வழிக்கும் வெளிச்சம் காட்டவில்லையே" என்றேன். மேலும் நான், "எனவே நீங்கள் எப்படி போகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர், "ஓ, நான் இந்த கண்ணாடிக் கூட்டு விளக்கினைக் கொண்டு நடந்து செல்கிறேன்" என்றார். 689 அப்பொழுது நான், "அந்த விதமாகத்தான் இதுவும் உள்ளது. நீங்கள் இப்பொழுது கண்ணாடிக் கூட்டு விளக்கை வைத்திருக்கிறீர்கள், ஒவ்வொரு முறையும் நீங்கள் இந்த வழியாக அடியெடுத்து நடந்து செல்லும்போது, இந்த வெளிச்சம் உங்களுக்கு முன்னால் உள்ளதை தொடர்ந்து காண்பிக்கும். நீங்கள் அப்படியே தொடர்ந்து நடந்து செல்வீர்களேயானால், அந்த வெளிச்சம் உங்களுடனே தொடர்ந்து பிரகாசித்துக்கொண்டே செல்லும்" என்றேன். 690 நீங்கள் இந்தக் காலையில் அதைத்தான் செய்கிறீர்கள், உங்களுக்கு கிறிஸ்து, மகத்தான பிரதான ஆசாரியர், உங்களுடைய சுகவீனத்திற்காக அல்லது உங்களுடைய வியாதிக்காக அல்லது உங்களுடைய ஆத்துமாவிற்காக பரிந்து பேசுபவர் தேவை. உங்களால் அதை புரிந்து கொள்ள முடியாமலிருக்கலாம். நாம் புரிந்து கொள்ளுகிறதில்லை . ஆனால் நாம், "அவர் ஒளியில் இருக்கிறதுபோல, நாமும் ஒளியில் நடக்க" கட்டளையிடப்பட்டிருக்கிறோம். நீங்கள் அந்த ஒளியில் ஒரு அடி எடுத்து வையுங்கள். நீங்கள் உங்களோடு அந்த ஒளியைப் பெற்றிருக்கும்போது, அந்த ஒளியானது அந்த பரிபூரண நாள் வரையில் பிரகாசிக்கும். அது உங்களுக்கு முன்பாக உள்ள பாதையில் தொடர்ந்து பிரகாசிக்கும். நாம் இந்த பெரிய பண்டைய பெரும்பாதையில் நடப்போம், நான் எங்கும் கூறிக்கொண்டே செல்வேன், எனக்குத் தெரிந்த எந்த ஒரு காரியத்தைக் காட்டிலும், கர்த்தாவே, நான் ஒரு பண்டைய கால கிறிஸ்தவனாயிருப்பதையே விரும்புவேன். அந்த பழையப் பாடலை நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? கிறிஸ்தவ அன்பைக் காண்பிக்க, ஒரு பண்டைய கால கிறிஸ்தவனைப் போன்றது வேறொன்றுமேயில்லை; நாம் அந்தப் பெரிய பண்டையப் பெரும்பாதையில் நடந்து கொண்டிருக்கிறோம், நாம் செல்லுகிற எங்கும் அதைக் கூறுவோம், எனக்குத் தெரிந்த எந்தக் காரியத்தைக் காட்டிலும், கர்த்தாவே, நான் பண்டைய கால கிறிஸ்தவனாயிருப்பதையே விரும்புவேன். 691 நான் அதை நேசிக்கிறேன். சரி. இப்பொழுது நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகிறோம். நாம்... நம்மால் வியாதியஸ்தரை சுகப்படுத்த முடியும் என்று நாம் உரிமை கோருகிறதில்லை. நாம் அவ்வாறு உரிமை கோரியிருந்தால், நாம் தவறான ஏதோ ஒரு காரியத்தையே கூறிக்கொண்டிருந்திருப்போம். இங்கிருக்கின்ற ஒவ்வொரு சுகவீனமான நபரும் ஏற்கனவே சுகமடைந்துவிட்டனர். அப்படித்தான் வேதம் உரைத்துள்ளது. "அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். அது சரிதானே? [சபையோர், "ஆமென்" என்கின்றனர்.ஆசி) 692 இங்குள்ள ஒவ்வொரு பாவியும், ஒருவேளை ஒரு பாவி இங்கு இருந்தால், இயேசு மரித்தபோதே, நீங்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டீர்கள். ஆனால் அவருடைய பிரசன்னத்திற்குள்ளாக செல்ல, உங்களுக்கு முன்பாக உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்ட போது, நீங்கள் இங்கே ஒருபோதும் மரிக்கவில்லை, அதன் பின்னரே அதை ஏற்றுக்கொள்ள முயற்சிக்கிறீர்கள். அது இப்பொழுது உண்டாக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் அதை இப்பொழுதே ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் இரத்தத்திற்கு அப்பால் செல்லுவீர்களேயானால், அப்பொழுது நீங்கள் ஒன்றுமில்லாதவர்களாயிருக்கிறீர்கள், ஆனால்... நீங்கள் ஏற்கெனவே நியாயந்தீர்க்கப்பட்டுவிட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாவநிவிர்த்தியை நடத்தின் விதத்தின் மூலமே நீங்கள் நியாயந்தீர்க்கப்படுகின்றீர்கள். புரிகிறதா? நீங்கள், நீங்கள் அங்கே உங்களையே நியாயந்தீர்த்துக்கொள்கிறீர்கள். 693 "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். ஆகையால் உங்களை குணப்படுத்துவதற்கு என்னிடத்தில் ஒன்றுமே கிடையாது. உங்களைக் குணப்படுத்த சபையினிடத்திலும் ஒன்றுமே கிடையாது. எனவே நீங்கள் கிறிஸ்துவை உங்களுடைய இரட்சகராக ஏற்றக்கொண்டது போல, நீங்கள் இந்தக் காலை பீடத்தண்டை வந்து, அவரை உங்களுடைய சுகமளிப்பவராகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், உங்களுடைய விசுவாசம் தவறிப்போகக் கூடாது என்று மாத்திரமே இதற்காக நாங்கள் ஜெபிக்க முடியும். எந்த ஒன்றுமில்லாமல்... தேவன் அற்புதங்களைச் செய்கிறார். அவர் மகத்தான அடையாளத்தைக் காட்டுகிறார். குருடர், செவிடர், ஊமையர் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியமும் இங்கே கூடாரத்திலே குணமாக்கப்படுகின்றனர். ஆனால் அது இருந்தாலும் அல்லது இல்லையென்றாலும் நாம் எப்படியும் அதை ஏற்றுக்கொள்கிறோம். அநேக சமயங்களில் அந்த காரியங்கள் தரிசனங்கள் மூலமாக நிகழ்கின்றன. 694 ஏறக்குறைய மூன்று அல்லது நான்கு ஞாயிற்றுக்கிழமைகளுக்கு முன்னர் இங்கு ஒரு மனிதன் குருடனாயும், முடக்கு வாதமுடையவனாயும் வந்து, கட்டுப்படுத்தும் நரம்பு செயல்திறனற்றுப்போயிருப்பதோடு ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தபோது, இங்கே அப்போது எத்தனை பேர் இருந்தீர்கள்? நான் வீட்டைவிட்டுப் புறப்படும் முன்னரே, நான் அவரை ஒரு தரிசனத்தில் கண்டேன், "அதாவது ஒரு மனிதன் அங்கே தன்னுடைய கருத்த முடியானது நரையாக மாறிவருவதோடு உட்கார்ந்திருப்பார். அவனுடைய மனைவியோ கிட்டத்தட்ட அறுபது வயது நிரம்பினவளாய், காண்பதற்கு அழகான ஒரு பெண்மணியாயிருப்பாள். அந்தப் பெண்மணி உள்ளே வந்து அழுதுகொண்டேயிருப்பாள்" என்பதையும், "நான் திரும்பி வரும்போது, அந்தப் பெண்மணியினுடைய கணவனுக்காக ஜெபிக்கும்படி என்னிடத்தில் வேண்டிக்கொள்வாள்" என்பதையும் தரிசனத்தில் கண்டேன். அவரோ அங்கு அமர்ந்திருந்தார். 695 நான் வந்த போது, நான் இங்கே சில சகோதரகளிடத்தில், "இதைக் கவனியுங்கள்" என்று கூறியிருந்தேன். 696 நாங்கள் பீடத்தண்டை சென்றபோது, மற்றவர்களும் ஜெபித்துக்கொண்டிருந்தனர். நான் ஜெபிக்கச் சென்றபோது, நான் சற்று தூரம் சென்று, மீண்டும் இங்கே திரும்பி வந்தேன். அப்பொழுது அது எப்படியிருக்கும் என்று கர்த்தர் கூறியிருந்தாரோ, அதே விதமாகவே சரியாக அவருடைய மனைவி எழுந்து வந்தாள். அது அந்த விதமாகவே சம்பவிக்கிறதா என்பதைக் காணும்படி ஜனங்கள் கவனித்து கொண்டிருந்தார்கள். அது ஒரு போதும் தவறிப்போகவேயில்லை. எனவே அவரோ சென்றபோது... 697 அவரை இங்கே அனுப்பியிருந்தவர் இந்தியானாவில் உள்ள பேர்ட்ஸ்-ஐ என்ற இடத்தில் உள்ள மருத்துவர் அக்கர்மேன் என்ற ஒரு மனிதர் என்பதை கண்டறிந்தேன். அவர் ஒரு கத்தோலிக்கனாய் இருக்கிறார், அவருடைய பையன் செயிண்ட் மெயின்ராட் என்ற இடத்தில் அங்குள்ள கத்தோலிக்கத் துறவி மடத்தில் ஒரு கத்தோலிக்க பாதிரியாராக இருக்கிறார். மருத்துவர் அக்கர்மேன் அவர்களோ என்னுடைய ஒரு வேட்டைக் கூட்டாளியாயிருக்கிறார், இவரே அந்த மனிதனை இங்கே அனுப்பி வைத்திருந்தார். ஒரு கறுப்பு தலை முடியினைக் கொண்ட மனிதன் அவரை அனுப்பி வைப்பார் என்பதை கர்த்தர் எனக்குக் காண்பித்திருந்தார், ஆனால் அது யார் என்பதையோ நான் அறியாமலிருந்தேன். 698 அப்பொழுது நான், "அது மருத்துவர் அக்கர்மேன் என்பவர்தானே?" என்று கேட்டேன். 699 அப்பொழுது அவர், "அது அவர்தான்" என்றார். பார்த்தீர்களா? அதன்பின்னர் அந்த மனிதன்... 700 அப்பொழுது நான், "இது கர்த்தர் உரைக்கிறதாவது" என்பதாகும் என்றேன். பின்னர் அங்கு நடந்து சென்றேன். மேலும் நான், "ஐயா, எழும்பி நில்லுங்கள்" என்றேன். அவர் குருடாயும்... தன்னுடைய கட்டுப்படுத்தும் நரம்பு செயல்திறனற்றுப் போனவராயுமிருந்தார். அவரால் நடுங்காமல் தன்னை நிலைப்படுத்த முடியவில்லை. பார்த்தீர்களா? அவர் அந்த விதமாகவே பல வருடங்களாக இருந்து வந்தார், மேயோ மருத்துவர்களிடம், மற்றவர்களிடத்திலும் அவர் சென்று சிகிச்சை பெற்று வருந்திருந்தார். ஆனால் அவருக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டபோது, அவர் எழும்பி நின்றார். பின்னர் அவர் அங்கிருந்து நடந்தே சென்றுவிட்டார். 701 முதலில் அவர், "என்னால் உம்மைக் காண முடியவில்லையே" என்றார். அதன்பின்னர் அவர் கூச்சலிட்டு, "ஆம், என்னால் காண முடிகிறது" என்றார். அங்கேயே அவருடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர் ஒரு வைதீக ஸ்தாபன சபையைச் சேர்ந்தவராயிருந்து வந்தார். அவருடைய மனைவியோ பிரஸ்பிடேரியனாயிருந்தாள். 702 சில ஜனங்கள், "பிரஸ்பிடேரியங்களும், வைதீக ஸ்தாபனத்தவரும், சத்தமிடுகிறதில்லை '', என்று எண்ணுகிறார்கள். நீங்கள் அவர்கள் கூச்சலிட்டதைக் கேட்டிருக்க வேண்டும். நிச்சயமாக அவர்கள் கூச்சலிட்டுக்கொண்டு ஒருவரையொருவர் கட்டித் தழுவினர். அவர் திரும்பி வந்து, தன்னுடைய சக்கர நாற்காலியை எடுத்துக்கொண்டு, மற்ற மனிதனைப் போல பார்க்க, பேச முடிந்தவராய் படிகளினூடாக நடந்து வெளியே சென்றார். 703 அன்றொரு நாள் அவரிடத்திலிருந்து ஒரு கடிதம், இல்லை , அவரைக் குறித்து கேள்விப்பட்டேன். சகோதரன் காக்ஸ் அவரிடத்திற்கு சென்றிருந்தார் என்று நான் நினைக்கிறேன். காக்ஸ் அவர்கள், "அந்த மனிதருடைய கண்களில் எரிச்சல் உண்டாக்குகிற ஒரு உணர்வு இருந்தது" என்று கூறினார். நிச்சயமாக அது நரம்பு, கண்பார்வைக்குரிய நரம்புகள் வளர்ந்து, திரும்பவும் உயிரடைந்து, அதனுடைய ஸ்தானத்தில் செயல்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். சாபம் எடுக்கப்பட்டாயிற்று. 704 நீங்கள் இயற்கையை அதனுடைய வழியிலேயே செயல்பட அனுமதிப்பீர்களேயானால், இயற்கையை ஒன்றுமே தடை செய்யவில்லையென்றால், அப்பொழுது அது தங்குதடையின்று முழுமையாய் செயல்படும். நீங்கள் உங்களுடைய கரத்தைச் சுற்றி ஒரு இரப்பர் வளையத்தை இறுக்கமாக போட்டுக்கொண்டால், அது இரத்த ஓட்டதை நிறுத்திவிடும். அப்பொழுது உங்களுடைய கரமானது முடிவிலே மரித்துப்போகும். இப்பொழுது, ஏனென்றால் இயற்கையாகவே நீங்கள் அதை அப்படியே தனியாக விட்டுவிட்டால், அது சரியாக இருக்கும். ஆனால் ஏதோ ஒன்று இயற்கையை குறுக்கிட்டுத் தடுத்துள்ளது. அப்பொழுது, உங்களால் அதைக் காணமுடியவில்லையென்றால், அப்பொழுது மருத்துவர் அதைப் புரிந்து கொள்ள வழியேக் கிடையாது. அவரால் இரண்டு காரியங்கள் மூலமாக மட்டுமே கிரியை செய்ய முடியும்; அவனால் எதைக் காண முடியும், அவனால் எதை உணர முடியும் என்பதன் பேரிலேயாகும். அவன் என்னக் காண்கிறான், அவன் என்ன உணருகிறான் என்ற காரியங்களின் மூலமாக மாத்திரமே அவரால் கிரியை செய்ய முடியும். 705 அவரால் அதைக் காணமுடையவில்லையென்றால், அப்பொழுது அது ஆவிக்குரிய பிரகாரமானதாயிருக்க வேண்டும். அப்பொழுது ஒரே ஒரு காரியம் மாத்திரமே உண்டு, ஒரு காரியம் மாத்திரமே சம்பவிக்க முடியும்; நாம் ஜெபிக்கையில் கிறிஸ்து சாபத்தை அகற்றி, அந்தப் பிசாசை துரத்துகிறார், அது இயல்பான நிலையினையடையத் துவங்கி குணமாகிறது. குணமடைந்துவிடுகிறது, அவ்வளவுதான் அதில் அங்கு உள்ளது. "என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். அது சரிதானே? அது சபைக்கான ஒரு வாக்குத்தத்தமாயுள்ளது. அது ஒரு வாக்குத்தத்தத்தின் வல்லமையாயுள்ளது. அது என்ன? அது, அது அவருடைய பிரசன்னம் நம்மோடு இருப்பதாக உள்ளது. இப்பொழுது அவர் அதைச் செய்தது போன்று, அப்படியே அந்தக் காரியங்களைச் செய்ய இந்தக் காலையில் நம்மை பரிபூரணப்படுத்திக் கொண்டிருப்பது எதுவென்றால், நாம் அந்த திரைக்குள் இன்னமும் இருக்கின்றதே அதற்கு காரணமாயுள்ளது. புரிகிறதா? ஆனால் நாமோ, "ஓ, ஆம்" என்று நமக்கு சொல்லுகிற ஒரு உணர்வினைப் பெற்றுள்ளோம். புரிகிறதா? 706 நீங்கள் உங்களுடைய சுகமளித்தலை ஏற்றுக்கொள்ளுகிறபோது... திரையானது என்னக் கூறுகிறது என்பது ஒரு பொருட்டல்ல, வார்த்தை என்ன கூறியுள்ளது என்பதே முக்கியமாகும். புரிகிறதா? அது தான் இது. அதுவேதான் இது. வார்த்தை எப்பொழுதும் எந்தக் காரியத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறதாயுள்ளது. தேவனுடைய நித்திய வார்த்தை! 707 சாராள் கிட்டத்தட்ட தன்னுடைய கணவனோடு பதினாறு அல்லது பதினேழு வயதிலிருந்தே வாழ்ந்து வந்திருந்தும் பிள்ளையில்லாமலிருந்ததையும், அவளுடைய கர்ப்பம் செத்துப்போய், தொண்ணூறு வயதானவளாயிருந்ததையும் நோக்கிப் பாருங்கள்; ஆபிரகாமிற்கோ அப்பொழுது நூறுவயதாயிருந்தது. தேவனோ அதை மாற்றிப் போட்டு, அவர்களுக்கு குழந்தையை அளித்தார். பார்த்தீர்களா? ஏனென்றால் அவர்கள் விசுவாசித்தனர். அவர்கள் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைத்தனர். நண்பனே, இந்தக் காலையில் அந்த வழியாகப் பிரவேசியுங்கள். 708 இன்றிரவு, நாங்கள் எதிர்பார்ப்பதோ... நீங்கள் எல்லோருமே எங்களிடத்திற்கு வருகை தந்துகொண்டிருப்பீர்களேயானால் நலமாயிருக்கும், நீங்கள் இந்தக் காலையில் இங்கே இருப்பதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தேவன் உங்களோடு இருப்பாராக. நீங்கள் மாலையும் இந்தப் பட்டிணத்தில் இருப்பீர்களேயானால், அப்பொழுது மெல்கிசேதேக்கைக் குறித்துப் பேசவுள்ள இந்த மற்ற ஆராதனையிலும் நீங்கள் இன்று மாலை கலந்து கொள்வதற்கு நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நீங்கள் அப்படி மாலையில்லாமலிருந்தால், நீங்கள் உங்களுடைய ஒரு சொந்த சபையை உடையவர்களாயிருந்தால், அப்பொழுது நீங்கள் உங்களுடைய சொந்த சபைக்குச் செல்லுங்கள். அது உங்களுடைய கடமையாயுள்ளது. நீங்கள் ஒரு சபையைச் சார்ந்தவராயிருந்தால், நீங்கள் அங்கே செல்லுங்கள். இதுவோ நாங்கள் இங்கே ஒன்று சேர்ந்து ஒருவரோடு ஒருவர் ஐக்கியங் கொள்ளுகிற ஒரு சிறு கூடாரமாய் உள்ளது. இப்பொழுது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 709 சகோதரி கெர்டி அவர்களே, மகத்தான வைத்தியர் இப்பொழுது அருகில் இருக்கிறார் என்ற பாடலை எங்களுக்காக வாசியுங்கள். எவரேனும் இங்கு ஜெபித்துக்கொள்ளப்படுவதற்காக இருக்கிறீர்களா? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள், ஜெப்வரிசையில் வரவேண்டுமென்றிருக்கிறவர்கள் உங்களுடைய விசுவாசத்தை கிறிஸ்துவண்டை வையுங்கள். சரி. நீங்கள் விரும்பினால், சபையின் இந்தப் பக்கத்தில் உள்ள வரிசையில் வாருங்கள். அவர்கள் இருக்கையை சற்று கீழே இழுத்து மடித்துவிடுவார்களேயானால், சகோதரனே, நீங்கள் அவ்வாறு செய்தால், அதனால் சபையோரை அதனூடாகக் கொண்டுவரும்படியாக இன்னும் சற்று இடம் நமக்கு அங்கே கிடைக்கக்கூடும். இந்தப் பக்கமாக வாருங்கள். 710 நாம் பாடுகையில், நாம் இப்பொழுது ஜெபிக்கப் போகிறோம். இங்குள்ள மூப்பர்கள் எந்த ஸ்தாபனமாயிருந்தாலும் அல்லது எந்த சபையாயிருந்தாலும், அது என்னவாயிருந்தாலும் பொருட்படுத்தாமல், நீங்கள் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசங்கொண்டிருந்தால், வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படி நீங்கள் என்னோடு கூட இந்த மேடையின் மேல் இங்கே வந்து நிற்க விரும்புவீர்களா என்று கேட்கப் போகிறேன். உங்களை ஏற்றுக்கொள்ள நாங்கள் மகிழ்ச்சியடைவோம். எந்த ஸ்தாபனமானாலும் அல்லது எந்த ஸ்தாபனமாகவும் இல்லாமலிருந்தாலும், அல்லது நீங்கள் என்னவாயிருந்தாலும், உங்களை ஏற்றுக்கொள்ள நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நீங்கள் ஜெபத்திற்காக இப்பொழுது அப்படியே வருவீர்களா, வந்து என்னோடு நில்லுங்கள். சகோதரன் நெவில், நீங்கள் எண்ணெய்யோடு வந்தால் நலமாயிருக்கும். 2